பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா - மதுரை மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரியும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தினசரியும் நூற்றுகணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். கடந்த 2ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தலுக்காக பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதை அடுத்து அவர் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கவே இன்று காலை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொன். ராதாகிருஷ்ணன் விரைவில் குணமடைய தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications