செக்கானூரணி செல்வக்குமார்.. கோட்டையூர் அருணா.. தல்லாகுளத்தில் கல்யாணம்.. அடுத்து நடந்தது ஷாக்!
தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே மணப்பெண் கழற்றி எறிந்தார்.
Recommended Video

மதுரை: ஒரு கல்யாண பொண்ணு வெக்கப்படலாம்.. ஆனா இப்படி செய்யலாமா?
மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கும் கோட்டையூரை சேர்ந்த அருணா என்பவருக்கும் பெரியோர்கள் பார்த்து கல்யாணம் முடிவு செய்தார்கள். அதன்படி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கல்யாணம் வைத்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
கல்யாண ஏற்பாடுகள் களை கட்டியது. ஊரெங்கும் இரு வீட்டாரும் பத்திரிகை கொடுத்தனர். குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது. செல்வக்குமார் அருணாவுக்கு தாலி கட்டினார். பிறகு ரிசப்ஷன் வேறு ஒரு இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரில் பயணம்
அதனால் திருமணத்துக்கு வந்தவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளம்பி போய் கொண்டிருந்தார்கள். மணமக்களும் அந்த மண்டபத்திற்கு செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் தாலி கட்டிய சிறிது நேரத்திற்கெல்லாம் மணமக்கள் கல்யாண மாலை, அலங்காரங்களுடன் காரில் ஏறி உட்கார்ந்தனர்.

தாலியை வீசினார்
மண்டபத்துக்கு கார் போய் கொண்டே இருந்தது. அப்போது திடீரென கல்யாண பொண்ணு அருணா, தனது மாலையை கழற்றி எறிந்தார். பிறகு தாலியையும் கழற்றி வீசினார். காரை நிறுத்த சொல்லி உடனே அருணா கீழே இறங்கிவிட்டார். பிறகு அந்த பக்கமாக நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்பி போய் கொண்டே இருந்தார்.

திடீர் கல்யாணம்
மாப்பிள்ளை எதுவுமே புரியாமல் இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்தார். மாப்பிள்ளை மட்டுமில்லை... இரு வீட்டு தரப்பினரும் விழித்து கொண்டு நின்றனர். பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல், செல்வகுமார் ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணத்துக்கு பேசினார்கள். அவர் சம்மதம் சொன்னதையடுத்து, அதே மண்டபத்தில் செல்வகுமார் அந்த திடீர் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார்.

பரபரப்பு
தாலி கட்டிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதை கழட்டி வீசி எறிந்துவிட்டு ஒரு ஆட்டோவை பிடித்து ஏறிச்சென்று விட்ட கல்யாண பெண்ணால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications