கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா! கட்டுப்பாடுகளை விதித்த சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை
மதுரை: சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க சில கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக விதித்துள்ளது.
மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்தள் பீய்ச்சி அடிப்பார்கள்.
பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசைத் திறன் கொண்ட பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதி பொருள்களை கலந்து பீய்ச்சி அடிக்கிறார்கள்.
இதனால் கள்ளழகர், தங்கக் குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் திரவியம், வேதிப் பொருகள் கலந்த தண்ணீரால் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள், பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பாரம்பரியமான நடைமுறையான தண்ணீரை பீய்ச்சி அடிப்பது நடந்து வருகிறது. ஆனால் இது பெண்கள், குழந்தைகளை ஒரு சில இளைஞர்கள் வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகிறார்கள்.
இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து அவர்களை பாதுகாக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனவே இனி பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் முன் அனுமதி பெற்றுக் கொண்டு அனுமதிக்கப்பட வேண்டும். கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது.
ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல் துறையினர் அனுமதிக்கக் கூடாது. இந்த உத்தரவு இனி வரும் காலங்களிலும் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications