இன்னொருத்தர் மனைவியை கால்கேர்ள் என மார்பிங்! ஹைகோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மதுரை: சமூகவலைதளங்களில் பெண்களின் மார்பிங் படம் வெளியிடுவது சமூகத்துக்கு எதிரான குற்றம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தென்காசியை சேர்ந்த ஹஜ் முகமது. இவர் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில் 2 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மனுதாரர் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கும் புகார்தாரருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் மனுதாரர் இன்னொருவர் மனைவியின் படத்தை மார்பிங் செய்து, அவரை கால்கேர்ள் என அடையாளப்படுத்தி, சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை அந்த தனிப்பட்ட பெண்ணுக்கு எதிரான குற்றமாக மட்டுமே கருத முடியாது.
ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றமாகும். மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்றம், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க வாய்ப்புள்ள குற்றமாக இருப்பதுடன், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றமாகவும் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications