தேர்தல் வெற்றிக்கு வழி என்ன?... அதிமுக ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
மதுரை: தேர்தல் பிரச்சார யுக்தி, வழிமுறைகள் குறித்து அ.தி.மு.க ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஆட்சியை தக்கவைக்க, அதிமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதே நேரம், ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 22 தொகுதிகளின் வெற்றியை வைத்து, தமிழகத்தின் அடுத்தக்கட்ட நகர்வை தீர்மாணிக்கும் என்பதால், மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளாகி உள்ளது.
அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என கூறப்படுவது போல், திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை காலி செய்வோம் என்று அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இதில் பங்கேற்றனர்.
திண்ணை பிரச்சாரத்தை முன்னெடுப்பது, சமூக வலைதளங்களுக்கான ஒருங்கிணைந்த யுக்திகள், தகவல் தொழில்நுட்ப பிரச்சார வழிமுறைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications