ஸ்டாலின் எடுத்த ஆக்ஷன்.. ஒரே நாளில் அதிரடி.. 3 பஸ்களில் பெண்களுக்கு இலவசம்.. எங்கேன்னு பாருங்க
முதல்வர் ஸ்டாலின் ஒரே நாளில் கிராம பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்
மதுரை: முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு, ஒரே நாளில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்துதான் பாப்பாப்பட்டி மக்கள் பூரித்து போயுள்ளனர்.
Recommended Video
காந்தி பிறந்தநாளையொட்டி மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் நேற்று முன்தினம் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்..
முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும், பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும், முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்..

பொதுமக்கள்
அப்போது முதல்வர், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பெண்கள், உசிலம்பட்டிக்கு மட்டும்தான் இலவசமாக செல்கிறோம்... பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு டிக்கெட் எடுத்து செல்கிறோம்.. இனி எங்களுக்கு அதே ரூட்டில் இலவச பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இலவச பஸ்
உடனே முதல்வர், பெண்கள் இனிமேல் பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு இலவசமாக அரசு பஸ்களில் செல்லலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடமும் முதல்வர் இது தொடர்பாக உத்தரவிட்டார்... இந்த உத்தரவை தொடர்ந்து உடனடியாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு பெண்களுக்கு இலவசம் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாப்பாபட்டி
இதுகுறித்து மதுரை மண்டல அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் திருவம்பலம் பிள்ளை, பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் தெரிவிக்கும்போது, "பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து உசிலம்பட்டி மற்றும் பெரியார் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் செல்கிறது... அதில் உசிலம்பட்டிக்கு 13 பஸ்கள் என மொத்தம் 28 நடைகள் செல்கிறது. அந்த பஸ்கள் அனைத்தும் சாதாரண கட்டண பஸ்கள். எனவே அதில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்து வந்தனர்.

3 பேருந்துகள்
அதேபோல் பெரியார் பஸ் நிலையத்திற்கு 3 பஸ்கள் 10 நடைகள் செல்கிறது. அதில் ஒரு பஸ் மட்டும் தான் சாதாரண கட்டண பஸ். எனவே அதில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வந்தனர்.. முதல்வர் உத்தரவை தொடர்ந்து உடனடியாக பாப்பாபட்டியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு பஸ்களும் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டுவிட்டன... பெண்கள் இதில் இலவசமாக பயணம் செய்யலாம்" என்றனர்.

மகிழ்ச்சி
முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட ஒரே நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து, அக்கிராம பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.. இதுவரை மதுரைக்கு வேலைக்கு செல்ல மாதம் ரூ.1500 முதல் 2 ஆயிரம் வரை செலவானது... ஆனால், இப்போது சாதாரண கட்டண பஸ் இயக்கப்படுவதால் பெண்கள் இலவசமாகவும், ஆண்கள் குறைந்த கட்டணத்திலும் பயணம் செய்யலாம்... இதனால் எங்களுக்கு செலவுகள் குறையும். எங்கள் கோரிக்கையை ஏற்று ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி" என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications