நள்ளிரவில் கல்லூரி மாணவன் வெறிச்செயல்.. வீட்டில் பெட்ரோல் குண்டு.. மதுரை அருகே நடுங்க வைத்த சம்பவம்!
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர் பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் விக்னேஸ்வரன், கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், முத்தையாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், மீண்டும் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியன்று முத்தையாவிற்கும், மதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, முத்தையாவின் மகன் விக்னேஸ்வரன், நள்ளிரவில் மதன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நல்வாய்ப்பாக மதன் குடும்பத்தினர் உயிர் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மதன் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர், முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தில் கல்லூரி மாணவர் விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications