மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்குது.. தினகரனிடமிருந்து பறிமுதலான குக்கர் சின்னம்.. நிர்மலா தேவி வக்கீல் வசம் ஒப்படைப்பு!

பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பேராசிரியை நிர்மலாதேவியின் வக்கீல் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் ஒரு வருட காலம் அடைக்கப்பட்டிருந்த கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, தற்போது ஜாமீனில் உள்ளார். ஆனால் நிர்மலா தேவிக்கு ஆதரவாக வாதாடியவர் பசும்பொன் பாண்டியன்தான்.

Cooker symbol allocated for Nirmala devis advocate

சில தினங்களுக்கு முன்பு திடீரென செய்தியாளர்களை பசும்பொன் பாண்டியன் சந்தித்து பேசினார். அப்போது தான் ஒரு கட்சி ஆரம்பித்திருப்பதாகவும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தன் கட்சியின் சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் நேரடியாக போட்டியிட போவதாகவும் கூறினார்.

பார்ரா.. வாசனிடமிருந்து சைக்கிளைப் பறித்துக் கொண்டு.. ஆட்டோவை கொடுத்த தேர்தல் ஆணையம்! பார்ரா.. வாசனிடமிருந்து சைக்கிளைப் பறித்துக் கொண்டு.. ஆட்டோவை கொடுத்த தேர்தல் ஆணையம்!

இந்நிலையில், அவருக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அப்போது தேர்தல் அதிகாரி பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கினார்.

இந்த சின்னம் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்ட சின்னமாகும். தற்போது தினகரனுக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் குக்கர் சின்னம் பசும்பொன் பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

English summary
EC has allocated Cooker Symbol to Nirmala Devis advocate Pasumpon Pandian
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X