லண்டனில் இருந்த மதுரை வந்த பயணிக்கு கொரோனா தொற்று - உருமாறிய கொரோனாவா என பரிசோதனை
லண்டனில் இருந்து மதுரை வந்துள்ள ஒரு பயணிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த நபர் தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை: லண்டனில் இருந்து துபாய் வழியாக மதுரை வந்துள்ள ஒரு பயணிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த நபர் தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video

பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டன் உடனான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் பிரிண்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் இருந்து டெல்லி திரும்பிய பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அனைவரின் சளி மாதிரிகளும் புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் லண்டனில் இருந்து துபாய் வழியாக மதுரை வந்த 88பயணிகளில் 29 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மதுரை தவிட்டுசந்தை பகுதியை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அவரை மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். மீதியுள்ள அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தபட்ட மையம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மாதிரியை பூனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்ப பட்டுள்ளது. தற்போது பிரட்டனில் புதிதாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் என்பதை பூனேவின் ஆய்வு முடிவிற்கு பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் இருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து இருவரையும் மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications