துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதி
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதியானது.
Recommended Video
துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலி எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் தமிழகத்தில் எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் என பாதிக்கப்பட்டு வரும் நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ளார். இதையடுத்து இவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவருடன் அண்மையில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications