விட்றா விட்றா.. பொண்டாட்டி படுத்துறாளே.. பஸ்ஸூக்கு அடியில் புரண்டு புரண்டு உருண்ட நபர்.. மிரண்ட மதுரை
மதுரை: மதுரை பெரியார் ஸ்டாண்ட்டில் மிகப்பெரிய பரபரப்பை கார்த்திக் ஏற்படுத்திவிட்டார்.. இவரை சமாளிக்க, போலீசார் பெரும்முயற்சி எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது மதுரையில்?
போதை தலைக்கேறி, குடிமகன்கள் செய்யும் அட்டகாசங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. 4 நாட்களுக்கு முன்புகூட, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒரு சம்பவம் நடந்தது.
அங்குள்ள இளைஞர் பெயர் சபின்... டெம்போ வேன் டிரைவரான இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

ரணகளம்: இப்படிப்பட்ட சூழலில், சபின் காதலித்து வந்ததாக சொல்லப்படும் பெண்ணின், சொந்தக்கார பெண்ணுக்கு 4 நாட்களுக்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது.. குடும்ப உறவினர்களும், ஊர்க்காரர்களும், வீடு முழுக்க கல்யாண களை நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.. அப்போது, அங்கு மதுபோதையில் வந்தார் சபீன்.. தனக்கு தெரியாமல், காதலிக்கு அவரது வீட்டில் திருமணம் ஏற்பாடு நடப்பதாக நினைத்து டென்ஷன் ஆகிவிட்டார்.. கல்யாண வீட்டிலும் ரகளையில் ஈடுபட்டார்.
பெற்றோர் வாதம்: காதலியின் பெற்றோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. அங்கிருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் சபின், அவர்களின் பேச்சை கேட்கவில்லை.. இவரது ரகளை தாங்க முடியாமல், குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. போலீசார் வந்ததும், அவர்களிடம் தகராறு செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டார் சபின்.. அதற்கு பிறகுதான் அவரை அள்ளிக்கொண்டு போனார்கள் போலீசார்... இதோ மதுரையில் ஒரு சம்பவம் நடந்து.. மதுரை எல்.ஐ.சி நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் கார்த்திக். இவரும் மதுப்பிரியரே.
தினமும் தண்ணி அடித்துவிட்டு, வீட்டுக்கு சென்று, மனைவியுடன் தகராறு செய்வாராம்.. சம்பவத்தன்று வழக்கத்தைவிட அதிகமாகவே தண்ணி அடித்துள்ளார்.. போதையின் உச்சத்தை அடைந்துவிட்ட நிலையில், பரபரப்பு மிகுந்த பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார்.. அங்கே நிறைய பஸ்கள் நின்றுகொண்டிருந்தன.. அந்த பஸ்களுக்கு நடுவே படுத்து உருண்டபடி இருந்துள்ளார்.

சூழ்ந்துவிட்டனர்: இதனை கண்ட வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் தந்தனர்.. இதையடுத்து போலீஸாரும் அங்கு வந்து, கார்த்திக்கை ரோட்டிலிருந்து எழுந்துவரும்படி சொன்னார்கள்.. ஆனால் போலீஸார் பேச்சை கார்த்திக் கேட்கவில்லை.. தொடர்ந்து சாலையிலேயே படுத்து உருண்டு கொண்டிருந்தார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது..
இவர் அட்டகாசத்தை வேடிக்கை பார்க்க, பொதுமக்களும் சூழ்ந்துவிட்டனர்.. எவ்வளவோ முயன்றும் போலீஸாரை அலைக்கழித்து கொண்டிருந்தார் கார்த்திக்.. கடைசியில், குண்டுகட்டாக அவரை தூக்கிக்கொண்டு, ஸ்டேஷனுக்கு சென்றார்கள்.. விசாரணையும் நடத்தினார்கள்...
அதற்கு கார்த்திக், "மனைவி டார்ச்சரை என்னால் தாங்க முடியவில்லை.. தினமும் சண்டை போடறா.. கண்ணாடியால் என்னை அடித்து காயப்படுத்திட்டாள்" என்று புகார் சொல்லி உள்ளார்.. பிறகு போலீசார் அவரிடம், டிரைவிங் லைசென்ஸ் எங்கே என்று கார்த்திக்கிடம் கேட்டனர்..
பஸ் ஸ்டாண்ட்: அதற்கு கார்த்திக், "என்னை கேட்டால்? போன வாரம் தெப்பக்குளம் போலீஸார், குடிபோதையில் நான் வாகனம் ஓட்டி வந்ததாக சொல்லி, என்னோட லைசென்ஸை வாங்கிக்கிட்டாங்க" என்று சொல்லி அதிர வைத்தார்.. இதறுகுபிறுக, போலீஸார், கார்த்திக்கை அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர்.. கார்த்திக்கின் செயலால் ஒரு மணிநேரம் பரப்பு மிகுந்த பெரியார் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த மதுபோதையால் நாடு முழுவதும் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியப்போகுதோ?












Click it and Unblock the Notifications