மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூக்கையா தேவருக்கு என்ன நாள்? கன்பியூஸ் ஆன திண்டுக்கல் சீனிவாசன்.. செய்தியாளர்கள் கேள்வியால் டென்சன்

Google Oneindia Tamil News

மதுரை: பி.கே.முத்தையா தேவரின் 43 வது நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 100 வது நினைவுநாள் என்று கூறி குழப்பமடைந்தார்.

ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையா தேவர் முத்துராமலிங்க தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர்.

இந்த நிலையில், மூக்கையா தேவரின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.

ஓபிஎஸுக்கு கேட்.. “பவர்” காட்டிய பழனி! திரண்ட தெற்கு தலைகள்.. மூக்கையா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி ஓபிஎஸுக்கு கேட்.. “பவர்” காட்டிய பழனி! திரண்ட தெற்கு தலைகள்.. மூக்கையா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி

தென்மாவட்ட தலைவர்கள்

தென்மாவட்ட தலைவர்கள்

இந்த நிலையில் காலை தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மூக்கையா தேவர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுடடன் ஆயிரக்கணக்கான தெற்கு மாவட்ட அதிமுகவினர் திரளாக பேரணியாக சென்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், முத்துராமலிங்க தேவரின் அருமை சகோதரர் மூக்கையா தேவர் என்று சொல்லவந்து வாரிசு என்று திருத்திக்கொண்டார். அடுத்து எங்கள் அன்பு மாமா மூக்கையா தேவரின் 100வது நினைவுநாள் என்று சொன்ன திண்டுக்கல் சீனிவாசனை இடைமறித்த செல்லூர் ராஜு, 43 வது நினைவுநாள் மற்றும் 100 வது பிறந்தநாள் என்று கூறினார்.

எடப்பாடி உத்தரவு

எடப்பாடி உத்தரவு

வருங்கால முதலமைச்சர், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க இங்கு வந்து வீரவணக்கம் செய்துள்ளோம். உசிலம்பட்டியில் தேவர் சிலையை அமைக்க ஆணை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. முத்துராமலிங்க தேவர் மீது வைத்துள்ள அன்பை போல் அதிமுக மூக்கையா தேவர் மீதும் வைத்துள்ளது." என்றார்.

செய்தியாளர்கள் கேள்வி

செய்தியாளர்கள் கேள்வி

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், பல்வேறு பிரிவுகளாக இருக்கும் அதிமுக சேர்ந்து பயணிக்க வாய்ப்பு இருக்கா? என்று கேட்டார். அதற்கு
"இது நினைவுதினம். அப்றம் பேசலாம்." என்று சீனிவாசன் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த செய்தியாளர் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அணி தாவல் குறித்து கேள்வி வந்தது. டென்சனான திண்டுக்கல் சீனிவாசன், "ஏங்க இதெல்லாம் வேணாம். எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்." என்றார்.

எடப்பாடி முதலமைச்சர் ஆவார்

எடப்பாடி முதலமைச்சர் ஆவார்

அடுத்த நினைவுதினத்தில் எல்லோரும் ஒற்றுமையாக வருவீர்களா என்று செய்தியாளர் கேட்டதற்கு, "நிச்சயமாக நடக்கும். அனைத்து முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார். எல்லோரும் ஓட்டுப்போடுவீர்கள்." என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். அடுத்து போட்டி பொதுக்குழு குறித்து கேள்வி வந்தவுடன், "எப்பா இதெல்லாம் கேள்வி இல்லை. இதை பத்தி மட்டும் பேசுவோம். நன்றி." என்று கூறிவிட்டு சென்றார்.

English summary
Dindugal Srinivan confused in press meet at Mookaiya Devar memorial: பி.கே.முத்தையா தேவரின் 43 வது நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 100 வது நினைவுநாள் என்று கூறி குழப்பமடைந்தார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X