மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேஷன் கடைகளில் கைரேகை வைக்காமல் பொருட்கள் வழங்கப்படுமா.. அமைச்சர் பதில்

Google Oneindia Tamil News

மதுரை; கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்

Recommended Video

    ரேஷன் கடைகளில் கைரேகை வைக்காமல் பொருட்கள் வழங்கப்படுமா.. அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் - வீடியோ

    ரேஷனில் கைரேகை வைத்து பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், ஜனவரி 12ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகை முழுமையாக வழங்கப்படும் என்றார்,

    மதுரை நெல்லை பேட்டையில் முதலமைச்சரின் மினி கிளினிக் மையத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மாநகர ஆணையாளர் விசாகன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூதிறந்து வைத்தார்

     சர்ச்சை பேச்சு.. மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்.. பரபரப்பு சர்ச்சை பேச்சு.. மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்.. பரபரப்பு

    எப்போது

    எப்போது

    இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இந்த அரசு பொங்கல் நாளில் சிறப்புத் தொகுப்பு 2500 வழங்குகிறது. எங்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் டிச.31 ம் தேதிக்குள் டோக்கன் வழங்கப்பட்டு விடும். வரும் 12ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசு 2500 மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

    கைரேகை இல்லாமல்

    கைரேகை இல்லாமல்

    கைரேகை வைத்து பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு உள்ளதை ஒப்புக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

    விளம்பர முயற்சி

    விளம்பர முயற்சி

    தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக எடப்பாடி பழனிச்சாமி செயல் பட்டு வருவதாக பாராட்டினார். கிராமசபை கூட்டம் என்பது காந்தியடிகள் முன் மொழிந்து மக்களுக்காக அரசு செயல் படுத்துகிறது. இதனை விளம்பரத்திற்காக எதிர்கட்சிகள் பயன்படுத்துவது தவறானது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    முதல்வருக்கு பாராட்டு

    முதல்வருக்கு பாராட்டு

    இஸ்லாமியர்கள் மெக்கா செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் நிதி உதவியினை தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடியார் துவக்கி வைத்துள்ளார். மதுரையில் 10 கிளினிக் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களுக்கு இந்த கிளினிக்குகள் மிகப் பெரும் உதவியாக இருக்கும்.

     செல்லூர் ராஜூ

    செல்லூர் ராஜூ

    மு.க.ஸ்டாலின் குப்பை வரி குறித்து விபரம் தெரியாமல் பேசி வருகிறார். இது மத்திய அரசின் திட்டம். இதனை ரத்து செய்ய அமைச்சர் வேலுமணி தான் முன்மொழிந்தார். இந்த விபரம் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

    English summary
    Cooperatives Minister Sellur Raju told reporters in Madurai that the decision would be taken soon after consulting the Chief Minister on the distribution of goods in ration shops without fingerprints.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X