ஸ்டாலின் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக... மதுரை மாவட்ட எஸ்பி காரிலேயே சோதனை!
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காரிலேயே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார். அப்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக எஸ்பி மணிவண்ணன் நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டியூரில் தாசில்தார் சீதாலட்சுமி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் எஸ்பி மணிவண்ணனின் காரையும் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் காரில் சோதனை நடத்த மணிவண்ணன் ஒத்துழைத்தார். சிறிது நேரம் காரை சோதனை நடத்திய அதிகாரிகள், காரில் எதுவும் இல்லை என்று கூறினர். இதையடுத்து அவர் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். இதேபோன்று மேமடை பகுதியில் பறக்கும் படையினர் எஸ்பி மணிவண்ணன் காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதற்கு அவர் மறுப்பு சொல்லமால் முழு ஒத்துழைப்பு அளித்தார்.
போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மதுரை மாவட்ட எஸ்பியின் காரிலேயே பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications