அம்மா உணவகத்தில் கருணாநிதி படம்.. திசை திருப்பும் வீண் முயற்சியை கைவிடுங்கள்.. ஆர்பி உதயகுமார் சாடல்
மதுரை: அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை வைத்துத் திட்டத்தைத் திசை திருப்புவது வீண் முயற்சியே என்று விமர்சித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் அளியுங்கள் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களைத் தொடங்கி வைத்தார்.
குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டதால் அம்மா உணவகத்திற்குத் தமிழகம் முழுவதும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது.

கருணாநிதி படம்
திமுக ஆட்சியில் அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படுமா அல்லது பெயர் மாற்றப்படுமா என பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனிடையே அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் மதுரை அம்மா உணவகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி படமும் இடம்பெற்றிருந்தது.

உதயகுமார் கடிதம்
இது பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து விசாரணைக்கு மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில் அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை வைத்துத் திட்டத்தைத் திசை திருப்புவது வீண் முயற்சியே என்று விமர்சித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார், படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் அளியுங்கள் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
இது தொடர்பாக அவர் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஜெயலலிதா தமிழகத்தில் பசிப்பிணி இருக்கக்கூடாது என்று மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கினார், அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு மலிவான விலையில் உணவினை வழங்கும் வகையில் கடந்த 19.02.2013 அன்று அம்மா உணவகத்தைச் சென்னையில் புரட்சித்தலைவி தொடங்கி வைத்தார்.

மதுரை அம்மா உணவகம்
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாள்தோறும் 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் பசியாறிப் பயனடைந்தனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது அம்மா உணவக திட்டத்தினை ஆந்திர, கர்நாடகா, ஒரிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் தற்போது 12 அம்மா உணவகம் உள்ளது. இதில் 12 பேர் கொண்ட பெண்கள் குழுவாக இணைந்து அம்மா உணவகத்தை நடத்தி வருகின்றனர். அதிகாலை முதல் மாலை வரை பணியாற்றி வருகின்றனர்.

6 மாதமாகப் பணம் தரவில்லை
திருமங்கலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அம்மா உணவகத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் விநியோகம் செய்து வருபவர்களுக்குக் கடந்த 6 மாதமாகப் பணம் கொடுக்கப்படாமல் அவர்களை அலகழித்து வருவதால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுவதிலும் உணவு தயாரித்து வழங்குவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுவருகின்றன. இதனால் தொடர்ந்து அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கி ஏழை எளிய சாமானிய மக்களின் பசி தீர்க்கும் சேவையைத் தொடர்ந்து செய்ய முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

வீண் முயற்சி
மதுரையில் அம்மா உணவகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா படத்திற்கு அருகிலேயே கருணாநிதியின் படத்தை வைத்துத் திட்டத்தைத் திசைதிருப்புகிற வகையில் ஜெயலலிதா படத்தை மறைக்க முயற்சிப்பது, அகற்ற முயற்சிப்பது வீண் முயற்சியே கருணாநிதியின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துத்தை அளித்தால் ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தற்போது தடை ஏற்பட்டிருக்கின்ற திருமங்கலம் அம்மா உணவகம் தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications