அவசரக் குடுக்கை.. அரைவேக்காட்டுத் தனமாய் பேசும் அண்ணாமலை! தாங்க மாட்டீங்க..ஆர்பி உதயகுமார் அதிரடி!
மதுரை: எடப்பாடி பழனிசாமி பற்றி அண்ணாமலை அரைவேக்காடு தனமாக தொடர்ந்து பேசினால் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும், அண்ணாமலை பிஜேபி உறுப்பினரா அல்லது அதிமுக உறுப்பினரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூசியத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைசர் ஆர். பி உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய ஆர்பி உதயகுமார்," தமிழக அரசியலில் வெத்து விளம்பரம், வெளிச்சம் காட்டும் வகையில் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள், பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல் அவதூறு பரப்பி நாக்கில் நரம்பு இல்லாத வகையில் அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசிகிறார். எடப்பாடி மீது அவதூறு பரப்பி அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
தன்னை முன்னிலைப்படுத்த தேவையான அனுபவம் தகுதி வேண்டும். ஆனால் அண்ணாமலை பெற்றுள்ளாரா ? எதுவும் இல்லை. கற்பனையை கொட்டி விட்டு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவரின் பேச்சு தெளிவாக காட்டுகிறது. எடப்பாடி பற்றி நாக்கூசாமல் அவதூறு பரப்பு வருவதை சாமானிய தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் 50 ஆண்டு கால பொது வாழ்வில் ஆற்றிய சேவை மறைக்க முடியாது.
கிளைக் கழக செயலாளர் தொடர்ந்து 50 ஆண்டு காலம் கழகத்தில் பணியாற்றி அம்மாவின் அமைச்சரவையில இருந்து சேலத்திற்கு வளர்ச்சி திட்டங்களை கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து தமிழகத்திற்கு சேவைகள் செய்தார் அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு சொல்ல முடியும். 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்து மருத்துவ கனவை நினைவாக்கி வரலாற்றில் இடம் பிடித்தார்.
அதையெல்லாம் மறைக்கும் விதமாக இன்றைக்கு அண்ணாமலை அவதூறு பிரச்சாரத்தை பரப்புகிறார்.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் ,உள்துறை அமைச்சர், அதனை தொடர்ந்து நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 மூத்த அமைச்சர்கள் களத்தில் நின்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கைகள் தான் காரணம்.
எடப்பாடி கண்ணாடி பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார். முதலில் அண்ணாமலை அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும், அப்போதுதான் அவருக்கு புரியும். பிஜேபியில் தற்போது கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். தற்போது அவர்கள் மீது கைது வழக்கு என்று வருகிறது. பிஜேபியில் உழைத்த மூத்தவர்கள் எல்லாம் திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணித்து வருகிறார். அண்ணாமலை எந்த முதலீடு சேவை செய்யாமல், உழைப்பு இல்லாமல் தியாகம் செய்யாமல், முதலீட்டை அறுவடை செய்ய நினைக்கிறார்.அவருக்கு எப்போதும் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
தொடர்ந்து எலும்பு இல்லாத நாக்காக அண்ணாமலை பேசினால் தொண்டர்களே வெகுண்டு எழுவார்கள். அரவேக்கட்டுத்தனமாக வார்த்தைகளை சிதற விடுவதால். அதிமுகவுக்கு எந்த பின்விளைவும் ஏற்படப் போவதில்லை. தமிழ்நாடு மக்கள் எடப்பாடி பக்கம் உள்ளார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications