Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி குடும்பத்துக்கு பட்டா..மமதையுடன் செயல்படும் முதல்வர்! 2026ல் பாருங்க.. அதிரடி RB உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தை கருணாநிதி குடும்பத்திற்கு பட்டா போட்டு கொடுத்தது போல முதலமைச்சர் ஸ்டாலின் மமதையுடன் உள்ளார் எனவும், திமுகவின் வெற்றி தற்காலிக வெற்றி தான் நிரந்தர வெற்றி அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

SAY NO TO DRUGS - SAY NO TO DMK என்ற தலைப்பில் திமுக ஆட்சி நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் குறித்தும், RESIGN STALIN என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயம் குறித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

RB Udayakumar Mk Stalin DMK

இதனை தொடர்ந்து கழக அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் உசிலம்பட்டி தொகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," இன்றைக்கு சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேச முயன்றால் தூக்கி எறிகிறார்கள். கடந்தாண்டு மரக்காணத்தில் நடைபெற்ற கள்ளச்சாரய சம்பவத்தில் 22 பேர் இறந்து போனார்கள் இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது, இதனை தொடர்ந்து அப்போது ஸ்டாலின் இனி தமிழகத்தில் கள்ளச்சாராயம் சாவு நிகழாது என்று வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து அலட்சியப் போக்கால் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி 65 பேர் பலியானார். அதனைத் தொடர்ந்து தற்போது குமாரமங்கலத்தில் கள்ளச்சாரயம் அருந்தி இறந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறோம். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி குறித்து பேசி வருகிறார்கள். திமுக எண்ணிக்கையில் தான் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு வங்கியில் வெற்றி பெறவில்லை.

RB Udayakumar Mk Stalin DMK

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 33 சதவீதம் வெற்றி பெற்ற திமுக தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் 8 கட்சி கூட்டணி வைத்து பணபலம் ,அதிகார பலம், அதிகார துஷ்பிரயம் செய்து 26 சகவீதம் தான் வாக்கு வங்கி பெற்றுள்ளது. இதன் மூலம் திமுகவை மக்கள் புறக்கணித்து உள்ளார்கள் என்று பட்டவர்த்தமாக தெரிகிறது. இதே அதிமுக 2019 ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்தது. அப்போது சில கட்சிகள் கூட்டணியில் இருந்தது. அப்போது 19 சதவீதம் வாக்கு வங்கி பெற்றோம்,தற்போது இந்த தேர்தலில் அப்போது இருந்த கூட்டணி இல்லை.

சூழ்ச்சிகள், சூதுகள் இதையெல்லாம் முறியடித்து 40 தொகுதிகளில் எடப்பாடி கடுமையாக பிரச்சாரம் செய்து 21 சதவீதம் வாக்கு வங்கியை பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் 1.60 சதவீதம் கூடுதலாக வாக்கு வங்கியை எடப்பாடியார் பெற்றுத் தந்துள்ளார். இதன் மூலம் மக்கள் நம்பிக்கை பெற்று 2026 ஆம் ஆண்டு அதிமுக தமிழகத்தில் ஆளும் என்ற வரலாற்றை எடப்பாடியார் பெற்றுள்ளார்.

தமிழகத்தை கருணாநிதி குடும்பத்திற்கு பட்டா போட்டு கொடுத்தது போல முதலமைச்சர் செயல்படுகிறார். திமுக வெற்றி தற்காலிகம் தான் நிரந்தர வெற்றி அல்ல. விக்கிரவாண்டி வெற்றிக்கு முதலமைச்சர் லட்டு கொடுக்கிறார். இந்த லட்டுக்கு எத்தனை லட்டு கொடுத்தார் என்பது அவரது மனசாட்சி தெரியும். வீதி எங்கும் அமைச்சர்களை இறக்கி பணத்தை வாரி இறைத்தார்கள், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணபலம், அதிகாரம் பலம் அதிகார துஷ்பிரயோகம் செய்து தற்கால வெற்றியைத் தான் பெற்றுள்ளீர்கள், நிச்சயம் 2026 ஆம் ஆண்டு எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் அதுதான் நிரந்தர வெற்றி" என பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+