மதுரையே வியந்துடுச்சு.. உசிலம்பட்டி மெச்சிய "தாய்மாமன்".. ஆமா, அதென்ன பின்னாலயே வருது.. வேற லெவல்
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், நேற்றுமுதல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. அப்படி என்ன நடந்தது உசிலம்பட்டியில்?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.

அமர்க்களம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையிலலை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்..
மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.. கடந்த மாதம் நரிக்குடியில் ஒரு திருமணம் நடந்தது.. மாப்பிள்ளை சிவாவுக்கு சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் நிறைய ஆர்வமாம்.
அதனால், சிவாவின் நண்பர்கள், அவருக்கு பிடித்த, சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக கொண்டு வந்திருந்தனர்.. அவர்கள் கையில் சேவல்களையும், கிடாய்களையும் பார்த்ததுமே, மாப்பிள்ளை மணமேடையிலேயே துள்ளி குதித்தார்.. திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் இந்த சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

ஒரத்தநாடு: இதோ இப்போது, உசிலம்பட்டியில் ஒரு காதணி விழா நடந்து முடிந்துள்ளது.. இதைப்பற்றின செய்திகள்தான் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன.. திருமணம், காதுகுத்து, என்றாலே மதுரை மாவட்டம்தான் ஃபேமஸ்.. விசேஷங்களுக்கு செய்முறைகளை செய்து அசத்திவிடுவார்கள்.. அதிலும் தாய்மாமன் சீர் என்றால் கூடுதல் விசேஷம் உண்டு..
அப்படித்தான், இந்த விழாவும் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள, ரயில்வே பீட்டர்ரோடு பகுதியை சேர்ந்த தம்பதி சரவணன் -ஜெயகீதா.. இவர்கள் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
கருமாத்தூர்: இந்த விழாவிற்கு, கருமாத்தூரிலிருந்து கிளம்பி வந்துள்ளார் அவர்களின் தாய்மாமன்.. அவர் பெயர் ஜெயபிரபு.. தாய்மான் உறவு என்பதால், இவரது தலைமையிலேயே சீர்வரிசைகள் ஊர்வலமாக கிளம்பியது.. அதுவும் பழங்கால பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்கள் நிரம்பி வழிந்தன.. இதைத்தவிர, காய்கறிகள், பழங்கள் என அத்தனையும் சீர்வரிசையில் இடம்பெற்றிருந்தன.

கரகாட்டம், ஒயிலாட்டம், முட்டுக்கிடா ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க, கதகளி நடனம் அமர்க்களப்பட, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தார்.. இன்றைய காலக்கட்டத்திலும், மாட்டுவண்டிகளில் சீர்வரிசைகள் வருவதை பார்த்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக நின்று பார்த்தனர்..
ஆச்சரியம்: அப்போது சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாண வேடிக்கை, பட்டாசுகள் சத்தம் முழங்கி கொண்டேயிருந்திருக்கிறது.. நீண்ட வரிசையில் இந்த சீர்வரிசை ஊர்வலம் சென்றிருக்கிறது.. பிரமாண்ட முறையில் நடந்த காதணி விழாவின் வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications