அரசு மருத்துவமனை பில்டிங்கை பார்த்ததும் டென்ஷன் ஆன மா.சுப்பிரமணியன்.. காண்ட்ராக்டருக்கு டோஸ்!
மதுரை:பரமக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு இன்று திடீர் விசிட் அடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு கட்டுமான பணி முடிக்கப்படாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டதை பார்த்து டென்ஷன் ஆனார். உடனே தொலைபேசியில் பேசி ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட் வைக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைகளுக்கு திடீர் விசிட் அடிப்பது வழக்கம். ஆய்வுக்கு செல்லும் போது மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளார்களா? தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்தெல்லாம் அங்கு பணியில் இருக்கும் மருத்துவ ஊழியர்களிடமும், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வார்.

திடீர் ஆய்வு: இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் உடனடி ஆக்சனையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று பரமக்குடிக்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். மருத்துவமனையில் ஒவ்வொரு இடமாக மா. சுப்பிரமணியன் ஆய்வினை மேற்கொண்டார். அப்போது மகப்பேறு வார்டு பிரிவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்துடன் இடம்பெற்று இருந்த மக்கள் நல்வாழ்வுத்துறையின் போஸ்டர்கள் இருந்தது.
கடுகடுத்த மா சுப்பிரமணியன்: இதைப் பார்த்ததும் ஆவேசம் அடைந்த மா. சுப்பிரமணியன் அங்கு இருந்த தலைமை மருத்துவரிடம் ஆட்சி மாறி 3 வருடம் ஆகிவிட்டது தெரியுமா? என கடிந்து கொண்டார். ஆட்சி மாறியது கூட தெரியவில்லை என்றால் உங்களைத்தான் மாற்ற வேண்டும் என்றும் கடுகடுத்தர். தொடர்ந்து சிடி ஸ்கேன் அறை இருக்கும் பகுதிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்றார்.
குடோன் போல: அங்கு பழைய அட்டை பெட்டிகள், பேப்பர்கள் என குடோன் போல காட்சி அளித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் எப்போது கடைசியாக பயன்படுத்தப்பட்ட்டது என்று விசாரித்தார். விசாரணையில் கொரோனா காலத்திற்கு பிறகு அந்த அறை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது. அங்கு இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் சிடி ஸ்கேன் பயன்பாட்டில் இருப்பதாக சொல்கிறீர்கள்.
வயநாடு வெள்ளத்தில் கை கொடுத்த கார்கள்.. டேக் செய்த நெட்டிசன்ஸ்.. ஆனந்த் மகிந்திரா கொடுத்த அட்வைஸ்
திருதிருவென விழித்த ஊழியர்கள்: பிறகு இந்த குப்பைகள் எல்லாம் இங்கே இருக்கலாமா? என கேட்டார். இதற்கு திருதிருவென விழித்த மருத்துவமனை ஊழியர்கள் சமாளிக்க பார்த்தனர். ஆனாலும் விடாத மா. சுப்பிரமணியன் இங்கு அட்டை பெட்டிகளை வைப்பது சரியல்ல என்று கடிந்து கொண்டார். சிடி ஸ்கேன் ரூமில் இது எல்லாம் இருக்க கூடாது என்றும் அறிவுரை கூறினார். தொடர்ந்து மருத்துவமனையின் கூடுதல் கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர், அதனை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று கூறினார்.
15 வருடம் ஆகுமா?: இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் அழைத்து பேசிய மா. சுப்பிரமணியன்.. ஒன்றரை வருஷம் ஆகிறது. இன்னும் தரை மட்ட அளவையே தாண்டவில்லை எப்போது கட்டி முடிப்பீர்கள்... இன்னும் 15 வருடம் ஆகுமா? என்றும் உடனடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும்.. ஒப்பந்ததாரர் சரியில்லை என்றால் அவரை பிளக் லிஸ்ட்டீல் வைத்து விட்டு வெறு காண்ட்ராக்டரை போடுங்கள் எனவும் அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்த நடவடிக்கையால் பரமக்குடி மருத்துவமனை பரபரப்பாக காட்சி அளித்தது.












Click it and Unblock the Notifications