அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும்.. ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: சிவகங்கை மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ சம்மன் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கின் சாட்சிகள் 5 பேர் மற்றும் காவல்துறை தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 18 ஆம் தேதி மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்காக தனிப்படை காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த பிரவீன்குமார் (கோயில் ஊழியர்) வினோத்குமார் ( அஜித்குமார் நண்பர்), அருண்குமார் (காரை பார்க் செய்த ஆட்டோ டிரைவர்), நவீன் குமார் (அஜித்குமார் தம்பி) ஆகிய 4 பேர் 2 ஆவது முறையாக இன்று மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ டிஎஸ்பி மோகித் குமார் தலைமையில் நான்கு பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது
இதற்கிடையே, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், அஜித் குமார் கஸ்டடி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, தனது விசாரணை அறிக்கையை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "முக்கிய சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஏழு நாட்களில் முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வழங்கிய 7.5 லட்சம் இடைக்கால இழப்பீடு போதுமானதல்ல. கூடுதலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்.
அஜித் குமார் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு. வழக்கிற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. தமிழக அரசு, ரூ. 7.5 லட்சம் இழப்பீடும், இலவச வீட்டு மனை பட்டா, அரசு வேலை வழங்கி உள்ளது.
கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். விசாரணையில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications