சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்.. எஸ்.பி வருண்குமார் புகாரில் பதிவான வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடி!
மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி எஸ்.பி வருண்குமார் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்த வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விக்ரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியது தொடா்பாக திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் தான் காரணம் என நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், வருண் குமாரை விமர்சித்துப் பேசி இருந்தார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் கோரிய மனு மீது உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டார் நீதிபதி பரத சக்கரவர்த்தி. திருச்சி எஸ்.பி வருண்குமார் குறித்து சமூக வலைதளம் உள்பட எந்த இடத்திலும் தவறாகப் பதிவிடவில்லை என சாட்டை துரைமுருகன் தரப்பு தெரிவித்ததையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
மேலும், திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மிகவும் அருவருக்கத்த வார்த்தைகளை பேசியுள்ளது வேதனை அளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். எஸ்.பி மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
-
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications