விஏஓ பணியிடங்களை நேரடியாக நிரப்ப இடைக்கால தடை! வருவாய் செயலர், TNPSC தலைவர் பதிலளிக்க உத்தரவு
மதுரை: கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை VAO பணியிடங்களை நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மனு குறித்து வருவாய் துறை செயலாளர் மற்றும் TNPSC-யின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் VAOகளுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்கும் வரை, விஏஓக்களுக்கான காலி பனியிடங்களை TNPSC மூலம் நேரடி நியமனம் முறைக்கு இடைக்கால தடை விதிக்க
கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொது செயலர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது பயாஸ் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில்," நான் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக உள்ளேன். எனது சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றனர்.

அதில், " வருவாய் துறை ஆணையர் 218 கிராம நிர்வாக அலுவலர் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு செய்தார். பின்னர் இடம் மாறுதல் பெற விரும்புவோர் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகளின் அனுபவத்தை கருத்தில் கொள்ளாமல் இடம் மாறுதல் நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 218 காலிப்பணியிடங்களையும் TNPSC மூலம் நேரடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சட்ட விரோதம், இதனால் இடமாறுதலுக்காக காத்திருக்கும் அலுவலர்கள் பாதிக்கப்படுவார்கள்,
ஆகவே 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களின் அடிப்படையில், இட மாறுதல் வழங்கவும், அதன் பின்னர் நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, "பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக் கால தடை விதித்தும், வருவாய் துறை செயலாளர் TNPSC-யின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications