Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்.. இரு அர்ச்சகர் நியமனங்கள் ரத்து.. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

இரு அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை ஆகம விதிகளைக் காரணம் காட்டி ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக மாநிலம் முழுக்க 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அடுத்தடுத்து மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இருப்பினும், பயிற்சியை முடித்த 207 பேருக்குப் பணி நியமனத்தை வழங்க ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் தடை கோரி நிலையில், நீதிமன்றமும் தடை விதித்தது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை அமைத்த பிறகு, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறக்கப்பட்டு, 151 மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இது மட்டுமின்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 28 பேருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. அறநிலையத்துறை கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு என விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

ஆகம விதிகள்

ஆகம விதிகள்

அர்ச்சகராகச் சேர இருப்போர் ஆகம பள்ளிகளில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.. 18 முதல் 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இந்த புதிய நியமனங்களை எதிர்த்து அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆகம விதிகளைப் பின்பற்றி இயங்கும் கோயில்களில் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இது தொடர்பான பட்டியலைத் தயாரிக்கவும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது.

வழக்கு

வழக்கு

இந்தச் சூழலில் தான் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனங்கள் வழங்கப்பட்டது. தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்த 22 பேர் 57 பேருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டது. இருப்பினும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் திட்டத்தின் கீழ் திருச்சி ஸ்ரீரங்கம் குமார வயலூர் முருகன் கோயிலில் பிரபு, ஜெயபாலன் ஆகிய இருவரை அர்ச்சகர்களை நியமித்தது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் கூறி வழக்கு தொடரப்பட்டது.

ரத்து செய்து உத்தரவு

ரத்து செய்து உத்தரவு

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தாமதமாகத் தொடரப்பட்டுள்ளதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று பிரபு, ஜெயபாலன் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், இதை ஏற்க மறுத்த நீதிபதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனம் ஆகம விதிகளுக்கு எதிரானது எனக் கூறி பணி நியமனத்தை ரத்து செய்தார். மேலும், கோயில்களில் நீண்ட நாட்களாக அர்ச்சகராக உள்ளவர்களையே அர்ச்சகராக நியமிப்பது குறித்தும் 8 வாரங்களுக்குள்ளாகப் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+