"கைமாறிய" ஏட்டு மனைவி.. நகைக்கடை ஓனராம்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகியை சாய்த்த கும்பல்.. மதுரையில்
இந்து மக்கள் கட்சி நிர்வாகி, கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்
மதுரை: இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி, கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பான விசாரணையையும் போலீசார் உடனடியாக கையில் எடுத்துள்ளனர்.
மதுரையில் நாளுக்கு நாள் வன்முறைகள் பெருகி வருகின்றன.. கடந்த சில தினங்களாகவே, இந்த வன்முறைகளும், அதனால் ஏற்படும் கொலைகளும், மாவட்ட மக்களை கிலியில் ஆழ்த்தி உள்ளன.
10 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை வெட்டி கொன்றதில் 4 பேர் சிக்கினார்கள்.. 4 நாட்களுக்கு முன்பு, மதுரை கோர்ட்டில் ஆஜராக வந்த தலைமறைவு ரவுடியை வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்தது ஒரு மர்ம கும்பல்.

மணிகண்டன்
இப்போது இன்னொரு கொலையும் நடந்துள்ளது.. மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.. 45 வயதாகிறது.. மனைவியும் 2 குழந்தைகளும் இவருக்கு உள்ளனர்.. இவர் ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள எம்.கே புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும், இந்து மக்கள் கட்சியில் தென்மாவட்ட துணை செயலாளராகவும் பொறுப்பில் உள்ளவர்.. இந்நிலையில் நேற்றிரவு மணிகண்டன், கடை அருகே சென்றுகொண்டு இருந்தபோது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கல் மற்றும் அறிவாளால் மணிகண்டன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வழியிலேயே போன உயிர்
இதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்... படுகாயமடைந்த மணிகண்டன் உடனடியாக மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஜெய்ஹிந்தபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... இதனிடையே, இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொல்லப்பட்டதால், பதற்றமும், பரபரப்பு சூழலும் ஏற்பட்டது..

ஏட்டு மனைவி
எனவே போலீசார் சம்பவ பகுதியில் உடனடியாக குவிக்கப்பட்டனர்... தற்போது வரை அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்த படுகொலை நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரணையையும் நடத்தி வருகிறார்கள். இதன் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் தொடர்பாக இந்த கொலை நடந்ததாக சொல்கிறார்கள்.. ஏட்டு ஒருவரின் மனைவியுடன், மணிகண்டன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது..

கூடா உறவு
நகை தொழிலுக்காக பணத்தையும் தந்து அவருக்கு உதவியதாகவும், தான் கொடுத்த அந்த பணத்தையும், நகைகளையும் திருப்பிக் கேட்டதாலும்தான், கூலிப்படையை ஏவி மணிகண்டன் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது... இதில் ஏட்டு உள்பட 7 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மக்கள் நடமாட்டம் மிகுந்த சோலை அழகுபுரம் பகுதியில், கூலிப்படையினரால் நடத்தப்பட்ட இந்த கொடூர கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications