தொட்டுப்பார்.. திமிறி பாய்ந்த திருமாவளவன் காளை! தங்கக்காசு பரிசளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காளையை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாத வகையில் அது சீறிப் பாய்ந்து வெற்றி பெற்றுள்ளது.
காளையின் உரிமையாளர் திருமாவளவன் எம்.பி.க்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கிய தங்கக்காசு பரிசளிக்கப்படுவதாக ஜல்லிக்கட்டு களத்தில் அறிவிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மதுரையில் குவிந்து வருகிறார்கள். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படும் எனத் தெரிகிறது.. இவற்றை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை முறைப்படி பதிவு செய்துள்ளனர்.
முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்றில் விசிக தலைவர் திருமாவளவன் காளை அவிழ்த்துவிடப்பட்டது. காளை பிடிபடாமல் சீறிப்பாய்ந்ததால் ''அடடா மயிலக்காளை, மச்சக்காளை.. தொட்டுப்பார்.. திருமாவளவன் மாடு.. மாடு வெற்றிபெற்றது'' என வர்ணனையாளர் அறிவித்தார். திருமாவளவன் பெயரில் காளை அவிழ்த்துவிடப்பட்டதை போலவே தமிழக அரசியல் பிரமுகர்கள் பலரது பெயரிலும் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.
இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பரபரப்புக்கு பஞ்சமின்றி காட்சியளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படுகிறது.
இதனால் காளைகளை அடக்கி பரிசுகளை தட்டிச்செல்ல வேண்டும் என காளையர்கள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் களத்தில் இறங்கி வீரத்தை பறைசாற்றி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications