பிள்ளையார்பட்டி கோவிலில் முறைகேடு.. உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!
மதுரை: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோயில் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் ரூ.1.76 கோடி முறைகேடு செய்ததாக தொடர்பான வழக்கில் விசாரணை ஆணையம் அமைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களை முன்னாள் அறங்காவலர்கள் விற்பனை செய்துள்ளனரா என விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஆணையம் அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதில் கோயில் அறங்காவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாகச் சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அறங்காவலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் அறங்காவலர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது, இது குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "பிள்ளையார்பட்டி கோவில் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு தற்போது எவ்வளவு சொத்து உள்ளது? எங்கெங்கு சொத்து உள்ளது? எவ்வளவு நகைகள் உள்ளது? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
எனவே இது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்திடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவிக்கலாம். ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம், கோயில் அறங்காவலர்களிடம் விசாரணை நடத்தலாம். இது குறித்த அறிக்கையை வரும் ஜனவரி மாதம் 30 ஆம் தேதிக்குள் ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications