மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''பாஜக-அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும்''... மதுரையில் கூட்டணியை உறுதி செய்தார் ஜே.பி. நட்டா!

Google Oneindia Tamil News

மதுரை: சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார்.

Recommended Video

    மதுரை: மீனாட்சி அம்மனின் அசீர்வாதம் பாஜகவுக்கே…அடித்துக்கூறிய ஜே.பி.நட்டா!

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் முருகனின் வேல் ஏந்தும் நிலைக்கு வந்துள்ளார். இந்த நிலையை பாஜக அடைய வைத்துள்ளது என்றும் ஜேபி நட்டா கூறினார்.

    தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    ஜேபி நட்டா பிரசாரம்

    ஜேபி நட்டா பிரசாரம்

    பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று இரவு மதுரை வந்தார். இன்று, காலை மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் மதுரை பாண்டி கோவில் பகுதியில் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஜேபி நட்டா கலந்து கொண்டார்.

    வேட்டி, சட்டையில் ஜேபி நட்டா

    வேட்டி, சட்டையில் ஜேபி நட்டா

    ஜேபி நட்டா தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழில் பேசி உரையை ஆரம்பித்தார். ஜேபி நட்டா தொடர்ந்து பேசியதாவது:- பிரதமர் மோடி தமிழின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். பிரதமர் மோடி செல்லுமிடமெல்லாம் தமிழின் சிறப்பை மேற்கோள் காட்டி பேசி வருகிறார் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு நடவடிக்கை

    வேலைவாய்ப்பு நடவடிக்கை

    எங்களது ஆட்சியில் சென்னை, திருச்சி, சேலம், கோவை நகரங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரங்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கிடைத்துளளது. தமிழக பாஜக வேல் யாத்திரையை கையில் எடுத்தது.

    மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தும் நிலை

    மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தும் நிலை

    இதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் முருகனின் வேல் ஏந்தும் நிலைக்கு வந்துள்ளார். இந்த நிலையை பாஜக அடைய வைத்துள்ளது. தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய பாஜகவை ஆதரியுங்கள். தேச வளர்ச்சியுடன் இணைந்து தமிழகமும் வளர்ச்சி அடையும். தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும். இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.

    English summary
    BJP national leader JP Natta said the BJP and AIADMK would work together in the Assembly elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X