கண்ணதாசனா? எம்எஸ்வியா? அப்பவும் இளையராஜாவை வைரமுத்து விடலயே.. மதுரையில் ஒரே போடு
மதுரை: இளையராஜா குறித்த கேள்விக்கு, மீண்டும் தன் பாணியிலேயே பாடலாசிரியர் வைரமுத்து பதிலளித்திருக்கிறார்.. கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த பதிலும், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
மதுரையில் வலையங்குளம் என்ற வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பாடலாசிரியர் வைரமுத்து பங்கேற்று பேசினார்...

அப்போது மேடையில் வைரமுத்து பேசும்போது, "கார்ல் மார்க்சின் பிறந்தநாளும், மாநாடு நடைபெறும் இந்த ஊரும் பொருள் உடையது. மதுரையில் கோவில் இருக்கிறது.. மலையும் இருக்கிறது.. ஆனால் கடல் இல்லை. இதற்காகவே, விக்கிரமராஜா வணிகர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு கடலை உருவாக்கி இருக்கிறார்.
ஒருமுனை வரி: ஒரு முனை வரியை கொண்டு வந்தது உங்கள் அமைப்பு... நுழைவு வரியை நிறுத்தியது உங்கள் அமைப்பு... கொரோனா சமயத்தில், இந்த வணிகர் சமுதாயம்தான், தமிழர்களின் உயிரையே காப்பாற்றியது" என்றார்.
முன்னதாக, தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று வைரமுத்து மாநாட்டில் கோரிக்கையை முன்வைக்கவும், அதை ஏற்று தமிழில் பெயர் பலகை வைப்போம் என்று வணிகர் சங்கத்தினர் உறுதி அளித்தனர்.
வைரமுத்து: இதையடுத்து, வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது மாநாடு குறித்து சொன்னபோது, "இந்த மாநாடு பற்றி சொல்ல வேண்டுமானால், மிகவும் பயனுள்ளதாக அமைந்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறேன்.. வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்.
வணிகர்கள் தான் ஒரு சமூகத்தின் ரத்த ஓட்டமாக இருக்கிறார்கள்.. வணிகர்கள் தான் பல்வேறு இடங்களில் விளையும் பொருட்களை நம்முடைய வீட்டுக்குள் கொண்டு வந்து உதிரத்தில் சேர்க்கிறார்கள்... அந்தவகையில் வணிகர்கள் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்" என்றார்.
எம்எஸ்வியா: பின்னர் கண்ணதாசனா? எம்எஸ்வியா? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு வைரமுத்து, "கண்ணதாசனா? எம்எஸ்வியா? என்றால்? உடலா?.. உயிரா?.. என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் கண்ணதாசனா? எம்எஸ்வியா? என்கிற கேள்விக்கும் பதிலாக கிடைக்கும்.
காரணம், எம்.எஸ்.வி உயிராக இருந்திருக்கிறார் என்றால், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார்... உடலும், உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது" என்றார் வைரமுத்து.
பேசக்கூடாது: இதற்கு பிறகு "இளையராஜா தன் பாடல்களை பிறர் பயன்படுத்துவது" குறித்து என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்க முயன்றனர். ஆனால், அதற்கு பதிலளிக்க மறுத்த வைரமுத்து, டக்கென கைகளை உயர்த்தினார் மறுத்தார்.. இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று வைரமுத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications