நிலத்தை அளக்க விஏஓ பிடிவாதம்.. பத்திரப்பதிவுக்கு சார் பதிவாளர் கெடுபிடி.. ஆடிப்போன மதுரை, அரியலூர்
மதுரை: இன்று ஒரே நாளில், விஏஓ, சார் பதிவாளர் என இரு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி உள்ளனர்.. மதுரை மற்றும் அரியலூர் என இரு மாவட்டங்களில் நடந்த இந்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. கைதானவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தன்னுடைய மூதாதையரின் சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார்.

அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம் பதிவு செய்வதற்கு முதலில் ரூ. 40,000 லஞ்சம் கேட்டுள்ளார். பிறகு, ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பதிவு செய்து தருகிறேன் என ஜியாவுதீன் சொன்னாராம். ஆனால், மகாராஜாவுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
லஞ்சம்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஜியாவுதீனிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.
ஆனால், பணத்தை, தான் வாங்காத ஜியாவுதீன், பத்திர எழுத்தரின் உதவியாளர் எடிசன் இடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படியே அவரிடம் மகாராஜா ரூ.20 ஆயிரத்தை வழங்கினார்.. அப்போது, மறைந்திருந்த அதிகாரிகள் சுற்றிவளைத்து, கையும் களவுமாக பிடித்தனர்.. லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஜியாவுதீன் மற்றும் எடிசன் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் விஏஓ: அதேபோல, இன்று அரியலூர் விஏஓ-வும் கைதாகி உள்ளார்.. அரியலுார் மாவட்டத்தில், வங்குடி கிராம நிர்வாக அலுவலராக புகழேந்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரிடம் அய்யப்பன் நாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், தன்னுடைய நிலத்தை அளவை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு புகழேந்தி ரூ.2000 லஞ்சம் வேண்டும் என்றாராம்.
ஆனால் லஞ்சம் தர வேண்டாம் என்று நினைத்த வேல்முருகன், விஏஓ வேல்முருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புகழேந்தியிடம் வேல்முருகன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புகழேந்தியை கையும் களவுமாக கைது செய்தனர். தற்போது அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையையும் நடத்தி வருகின்றனர்.
பெருத்த அதிர்ச்சி: சமீபகாலமாகவே, வருவாய் மற்றும் பதிவுத்துறையில் பல்வேறு லஞ்ச புகார்கள் கிளம்பி வருகின்றன.. இவைகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவது, பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.இன்று ஒரேநாளில் 2 அதிகாரிகள் கைதாகி உள்ளது, பெருத்த அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications