அன்பில் மகேஷும் என் பிள்ளை மாதிரி தான்! ஆரத்தழுவி வரவேற்ற மு.க.அழகிரி! நெகிழ்ச்சிகர நிகழ்வு!
மதுரை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தனது பிள்ளை மாதிரி தான் என்று கூறி அவரை ஆரத்தழுவி வரவேற்றார் மு.க.அழகிரி.
உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு சந்தித்த போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றிருந்தார்.
அப்போது அன்பில் மகேஸை பார்த்தவுடன் அவரது தோளில் உரிமையாக கை போட்டு ஆரத்தழுவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் மு.க.அழகிரி.

மகிழ்ச்சி பொங்கல்
இந்த பொங்கல் மு.க.அழகிரிக்கு மகிழ்ச்சி பொங்கலாக அமைந்திருப்பதால் அவரது ஆதரவாளர்கள் இன்று முதல் மீண்டும் உற்சாகமாக வலம் வரத் தொடங்கியுள்ளார்கள். உதயநிதி ஸ்டாலின் மு.க.அழகிரி சந்திப்பை பொறுத்தவரை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மதுரை மாவட்ட அமைச்சர்களான மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் உட்பட யாரும் உதயநிதியுடன் மு.க.அழகிரி இல்லத்துக்கு செல்லவில்லை.

வீட்டில் விளையாடிய பிள்ளை
ஆனால் அதேவேளையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது நண்பரும் அமைச்சருமான உதயநிதியுடன் மு.க.அழகிரி இல்லத்துக்கு சென்றிருந்தார். முதலில் உதயநிதியை வரவேற்பதில் பிசியாக இருந்த மு.க.அழகிரி, அதன் பிறகு அன்பில் மகேஸை பார்த்தவுடன் மிகவும் உரிமையாக அவரது தோளில் கை போட்டு கட்டியணைத்து வீட்டிற்குள் வரவேற்று அழைத்துச் சென்றார். இந்தச் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த மு.க.அழகிரி, சின்ன வயதில் எனது வீட்டில் விளையாடிய பிள்ளைகள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருவதாக கூறினார்.

ஆர்வமுடன் போட்டோ
அப்போது அன்பில் மகேஷின் கையை பற்றி இவரும் என் பிள்ளை மாதிரி தான், மந்திரி ஆன பிறகு இப்பத்தான் பார்க்க வர்றாரு என கலாய்த்தார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. இதனிடையே அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகிய இருவருடனும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் பொங்கலில் இப்படியொரு சந்திப்பு நிகழும் என்பதை எதிர்பார்க்காத அவர்கள் மீண்டும் பழைய உற்சாகத்துக்கு வந்துள்ளனர்.

துரை தயாநிதி
இந்தச் சந்திப்பின் போது மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மதுரை இல்லத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிடப்படாமல் நடைபெற்ற மரியாதை நிமித்தமான திடீர் நிகழ்வு என அமைச்சர் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications