நள்ளிரவில் கண் விழித்து பார்த்த பாலகிருஷ்ணன்.. மனைவி கிடந்த கோலம்.. மதுரையில் விபரீதம்
மதுரை: மதுரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி அடிக்கடி நடந்த தகராறு காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்கள். மனைவி தூக்குப்போட்டு இறந்து போனார். கணவர் உளியால் குத்திக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
16 வயதில் உமாதேவியை திருமணம் செய்த பாலகிருஷ்ணன் போக்சோவில் கைதாகி சிறையில் இருந்தார். 18 வயது ஆன பின்னர் மீண்டும் இருவரையும் பெற்றோர் சேர்த்து வைத்தனர். திருமணம் செய்வதற்கு உகந்த வயதில் திருமணம் செய்யாமல் , அவசரப்பட்டு காதல மாயையில் விழுந்து திருமணம் செய்த ஜோடி இப்போது சிதைந்து போய் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் உமாதேவி தம்பதி. இவர்கள் மதுரை ஜீவா நகரில் லட்சுமிபுரம் தெருவில் வசித்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆவர்.

காதல் திருமணம்
பாலகிருஷ்ணன் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இவர் தனது ஊரான அருப்புக்கோட்டையில் இருந்த போது 16வயதே ஆன உமாதேவி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 5வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அதாவது உமாதேவிக்கு 11 அல்லது 12வயது இருக்கும் போதே காதலிக்க தொடங்கி 16 வயதில் திருமணத்தில் முடிந்துள்ளது,

சேர்த்து வைத்தனர்
16 வயதில் திருமணம் செய்த காரணத்தால் பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர், பின்னர் விடுதலையான பாலகிருஷ்ணனுக்கு உமாதேவியை 18 வயதான பின்னர் இரு வீட்டாரும் சேர்ந்து பேசி சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

அடிக்கடி சண்டை
கடந்த ஐந்து மாதம் முன்பு தான் மதுரை ஜீவா நகரில் குடியேறி உள்ளனர். தம்பதிக்கிடையே அடிக்கடி சின்ன விஷயங்களுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறதாம். நேற்றிரவும் இரண்டு பேரும் சண்டை போட்டிருக்கிறார்கள். இதனால், மன வேதனையடைந்த உமாதேவி கணவர் தூங்கி கொண்டிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தீவிர சிகிச்சை
பாலகிருஷ்ணன் கண் விழித்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வேதனையில் தன் கழுத்தில் உளியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது பாலகிருஷ்ணனின் அலறம் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டும், உமாதேவி தூக்கில் தொங்கியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பாலகிருஷ்ணனை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மதுரை ஜெய்ஹிந்புரம் போலீசார் உமா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications