மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மதுரை: உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
77 வயதாகும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை மேலும் பின்னடைவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான்,
மதுரை ஆதினம் உடல்நலத்தில் முன்னேற்றம் உள்ளது என்று திருஞானசம்பந்தர் தென்மண்டல அறக்கட்டளை தம்புரான் பேட்டியளித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மதுரை ஆதினத்தை இன்று தருமபுரி ஆதினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களை சந்தித்து கேட்டறிந்தார். இதனையடுத்து தருமபுரி ஆதினம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியை மதுரை ஆதினத்தில் நெற்றியில் இட்டார்.
இன்று தருமபுரி ஆதினம் மௌன விரதம் என்பதால் திருஞானசம்பந்தர் தென்மண்டல அறக்கட்டளையின் தம்புரான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரை ஆதீனம் உடல்நலத்தில் தற்போது முன்னேற்றம் உள்ளதால் நலமாக இருப்பதாகவும், விரைவில் பூரண குணமடைந்து மதுரை ஆதினத்திற்கு திரும்புவார் எனவும், தருமபுரி ஆதினம் மற்றும் மீனாட்சியம்மன் கோவில் விபூதிகள் ஆதினத்திற்கு வழங்கினோம் என தெரிவித்தார்.
மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் ஆகும்.
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது மதுரை ஆதீனம். இதுவரை 292 பேர் இங்கே மடாதிபதியாக. இதில் 292வது ஆதீனம்தான், அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமியாகும்.












Click it and Unblock the Notifications