மதுரையில் ஓங்கி உயர்ந்த மலை.. உச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா... முகப்பே பிரம்மாண்டம்.. அதிமுக மாஸ்
மதுரை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மதுரையில் மாநாடு நடத்துவதன் மூலம் தென் மாவட்டத்தில் தனது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகிறது அதிமுக. மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து பல்வேறு விதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை வலையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநாடு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டின் முகப்பில் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்ட மலை போல அமைத்து உச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. முகப்பு பகுதியில் சுமார் 51 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
சென்னையிலிருந்து மதுரை வரை நடைபெறும் மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இந்த நடைபயணத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சென்னையில் இருந்து மதுரையை நோக்கி செல்கின்றனர். சென்னையில் தொடங்கிய இந்த பயணம், மாநாடு நடைபெறும் நாளில் மதுரையை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுக மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்திக்காக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். 60,000 சதுர அடியில் மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. மழை மற்றும் வெயிலினால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மாநாட்டிற்காக தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வகையில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், தேவையான குடிநீர், இருக்கைகள், காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு ஆகிய ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 51 அடியில் அமைக்கப்பட்டுள்ள கொடியினை கே.பழனிசாமி ஏற்றுகிறார். அதனைத் தொடர்ந்து கண்காட்சியை திறந்து வைக்கிறார். தொடர்ந்து காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலையில் கே.பழனிசாமி பேசுகிறார். மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 25 லட்சம் பேர் பங்குபெறும் வகையில் மாநாடு திடல் மற்றும் உணவுக் கூடங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன என்று தெரிவித்தார் கே.பி. முனுசாமி.
அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் மாநாடாக மதுரை மாநாடு நடைபெறுவதால் அதிமுக நிர்வாகிகள் மாஸ் காட்ட தயாராகி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் மாநாடு என்பதால் தென் மாவட்டங்களில் இந்த மாநாடு பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications