மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்! கண்கொள்ளாக் காட்சி!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க அதனை மாடுபிடிவீரர்களும் பின்பற்றி வாசித்தனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் மிக பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதனை கால லட்சக்கணக்கானோர் மூன்று நாட்கள் மதுரையில் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மதுரையில் குவிவார்கள். அந்தளவுக்கு இந்த மூன்று ஊர்களிலும் மிகவும் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படும்.
இதனிடையே இன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கே அருகேயே 30 மருத்துவர்கள் 50 செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாம் அமைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் கால்நடை மருத்துவக் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படும் எனத் தெரிகிறது.. இவற்றை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை முறைப்படி பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை பொறுத்தவரை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆனால் இந்தாண்டு அமைச்சர் மூர்த்தி மட்டும் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications