இன்று முதல் 13-ந்தேதி வரை தசரா விடுமுறை.. மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்
மதுரை: இன்று முதல் 13-ந்தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தசாரா விடுமுறைக்காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் விசாரிக்கப்படும். அப்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குகளை விசாரிக்க போகும் நீதிபதிகள் விவரத்தை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ளார். அந்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்
சென்னை, மதுரையில் உயர்நீதிமன்றங்களுக்கு ஆண்டுதோறும் தசரா விடுமுறை விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விடுமுறை இன்று (அக்டோபர் 5 ) முதல் வருகிற 13-ந்தேதி வரை விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அக்டோபர் 5-ந்தேதி (இன்று) முதல் வருகிற அக்டோபர் 13-ந்தேதி வரை தசரா விடுமுறை விடப்படுகிறது.

இதனையொட்டி விடுமுறை கால நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் விவரம் வெளியிடப்படுகிறது. அதன்படி வருகிற 9-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விடுமுறை கால கோர்ட்டில் நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர், ஜோதிராமன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்கின்றனர்.
அன்றைய தினம் வேல்முருகன், ஜோதிராமன் ஆகிய 2 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அனைத்து வகை டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் விசாரிக்கின்றனர். நீதிபதி ராஜசேகர், அனைத்து வகையான கிரிமினல் வழக்குகளையும் விசாரிக்கிறார்.
எனவே விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசர வழக்கு ஆவணங்களை வருகிற அக்டோபர் 7-ந்தேதி காலை 10.30 மணி முதல் 1.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மனு தாக்கல் செய்பவர்கள், தங்களின் மனுக்களை அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யும்போது, கீழ்கோர்ட்டுகளின் உத்தரவு நகல்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற இ-மெயில் மூலமாக தகவல்களை பெறலாம். எக்காரணம் கொண்டும் விடுமுறை கால நீதிபதிகளின் வீடுகளுக்கு சென்று அவசர வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதி இல்லை" இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications