மதுரை குலுங்க குலுங்க.. ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்குகிறது மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா!
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோவில். மதுரையின் முக்கியமான திருவிழா என்றால் அது சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரையில் சித்திரை திருவிழா நெருங்குவது முதல் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு திருவிழாக் கொண்டாட்டம் தான்.

சித்திரை மாதம் அமாவாசை முடிந்த பிறகு கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை திவிழாவா தொடங்கும். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான அறிவிப்பை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சித்திரை திருவிழா கொடியேற்றம் காலை 9.55 முதல் 10.19 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடைபெற இருக்கிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 20ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 23ஆம் தேதி, திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைவபம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். விழா நடைபெறும் 12 நாள்களிலும் மீனாட்சி அம்மன், பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.
சித்திரை திருவிழா தொடக்கம் தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 11-ம் தேதி வாஸ்து சாந்தி நடைபெறும். ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும்.
அன்றிரவு கற்பக விருட்சம், சிம்மம் வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து தினமும் காலை மாலையில் சுவாமி அம்மன் புறப்பாடு நடைபெறும். ஏப்.13-ல் காலையில் தங்கச்சப்பரம், மாலையில் பூதம், அன்னம் வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். ஏப்.14 கைலாசபர்வதம், காமதேனு வாகனம், ஏப்.15ல் பாவக்காய் மண்டகப்படி, தங்கப்பல்லக்கு, ஏப்.16ல் தங்கக்குதிரை வாகனம், ஏப்.17ல் மீனாட்சிசுந்தரேசுவரர் சைவசமய ஸ்தாபித லீலை நடைபெறும்.
ஏப்.18ல் நந்திகேசுவரர், யாளி வாகன புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து ஏப்.19-ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் இரவு 7.35 முதல் 7.59 மணிக்குள் நடைபெறும். ஏப்.20ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்கு விஜயம் நடைபெறும். முக்கிய விழாவான ஏப்.21-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் நடைபெறும்.
அன்று மாலையில் பூப்பல்லக்கு, வெள்ளி சிம்மாசனம், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகன புறப்பாடு நடைபெறும். ஏப்.22-ல் காலை 7மணியளவில் தேரோட்டம் நடைபெறும். அன்றிரவு சப்தாவர்ணச்சப்பரம் எழுந்தருளல் நடைபெறும். ஏப்.23ல் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது.
அதனைத்தொடர்ந்து கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்.22ல் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். தொடர்ந்து முக்கிய விழாவான ஏப்.23ல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications