4 - 9ம் வகுப்பு மாணவர்களின் சமூகஅறிவியல் தேர்வு தேதி மாற்றம்.. மதுரை சித்திரை திருவிழா எதிரொலி
மதுரை: மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் 4ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அன்றைய தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிந்துவிட்டது. 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. வரும் 8 ம் தேதியுடன் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தான் அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு இந்த தேர்வு தேதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ம் தேதியும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஏப்ரல் 23ம் தேதி மதுரையில் பிரசித்திப்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 23ல் நடக்கும் சமூக அறிவியல் தேர்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அனுமதி பெற்று ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் நடத்தப்படாது. மாறாக அந்த தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications