போஸ்டர் ஒட்டினா 5000 ஃபைனா? முதல்ல குவிந்திருக்கும் குப்பையை அள்ளுங்க! மதுரை மாநகராட்சிக்கு கண்டனம்
மதுரை: மதுரை மாநகராட்சியில் போஸ்டர்கள் ஒட்டுவதால் நகரின் அழகு கெடுவதாக கூறி ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதித்து, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மலைபோல் குப்பைகள் தேங்கி இருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் அள்ளாமல், போஸ்டர்கள் ஒட்டுவதற்கு அபராதம் விதிப்பது தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்," மதுரை மாநகராட்சி கூட்டம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு குறைவதாகவும், குப்பைகள் அதிகமாவதாகவும், மாநகராட்சிக்கு அவப்பெயர் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சுவரொட்டி அபராதம்
கூறி சுவரொட்டிகள் ஒட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5000 அபராதம் விதித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகநராட்சிக்குட்பட்ட சாலைகள், தெருக்களில், கடைகள், வீடுகளுக்கு குப்பை வரி வசூல் செய்தாலும், குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 11 கால்வாய்களில் குப்பை தேங்கி கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய்களில் மரங்கள், செடிகள் வளர்ந்து புதர் போல் மண்டிக்கிடக்கிறது.
மதுரை மாநகராட்சி
கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நீடிக்கிறது. மதுரை நகர் வீதிகளில் பாதாளச் சாக்கடை ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து சாக்கடை நீர் கலந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. குண்டும், குழியுமான சாலைகள் சீர் செய்யப்படாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
குப்பை பிரச்சனை
மதுரை மாநகராட்சி வீதிகள் தூசி மண்டலமாக காணப்படுகிறது. மக்கள் மாசு கலந்த காற்றை சுவாசிக்கிறார்கள். சுவாச நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தேவையான பணியாளர்களை நியமித்து துரித நடவடிக்கை எடுத்தாலே போதும், மதுரை மாநகரம் எழில் மிகு நகரமாக மாறும். சுகாதாரமான, பாதுகாப்பான, தூய்மையான மாநகராட்சியாக மதுரை மாறும்.
மாநகராட்சி தீர்மானம்
அதைவிடுத்து, போஸ்டர்கள் ஒட்டுவதால் குப்பைகள் தேங்குவதாகவும், சுகாதாரசீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எந்த வகையிலும் பொருத்தமானது அல்லது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறுித்து ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சியினர், தங்களது கருத்துகளை போஸ்டர்கள் மூலமே வெளியிட்டு வரும்நிலையில் அவர்களது ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஒட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications