மதுரை மண்ணில் குவியும் சினிமா ஸ்டார்கள்.. ஜனவரி 23, 24, 25ல் வேலம்மாள் மைதானத்தில் நடக்கும் சம்பவம்!
மதுரை: மதுரையில் அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் நடிகர்கள், நட்சத்திரங்கள் விளையாடும் செலிபிரிட்டி பிரீமியர் லீக் தொடர் 3 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டு இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காத நிலையில், சிசிஎல் நடக்கவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி திறந்து வைத்தார். இந்த மைதானம் தென் மாவட்ட இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச தரத்தில் பிட்ச், மின் விளக்குகள், வீரர்களுக்கான ஓய்வறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வலைப்பயிற்சி கூடம், 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், நவீன வடிகால் வசதி மற்றும் ஒளிபரப்புக்காக 197 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய மைதானமாக மேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.
விரைவில் டிஎன்பிஎல் போட்டிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலம்மாள் மைதானம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. இதனால் மதுரை மாவட்ட மக்கள் சோகம் அடைந்தனர். இந்த நிலையில் நடிகர்கள் விளையாடும் செலிபிரிட்டி பிரீமியர் லீக் தொடர் வேலம்மாள் மைதானத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 23, 24, 25 ஆகிய 3 நாட்களில் 6 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பெங்கால், கேரளா, பஞ்சாப், தெலுங்கு, கர்நாடகா, சென்னை, போஜ்பூரி ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ் நடிகர்கள் ஆடும் 2 போட்டிகளில் வேலம்மாள் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதனால் மதுரை மண்ணிலேயே தங்களின் ஆஸ்தான திரை நட்சத்திரங்களை ரசிகர்கள் காணும் வாய்ப்பு அமைந்துள்ளது. அதேபோல் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் முக்கியமான தொடர் என்பதால், மதுரை மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications