மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகளில் குளறுபடி! அதிகாரிகள் அலட்சியம்! பாஜக பரபரப்பு புகார்!
மதுரை: மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகளில் மாநகராட்சி நிர்வாகம் குளறுபடி செய்த காரணத்தால் தான் 2 பேர் உயிரிழக்க நேரிட்டதாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
மேலும், காலம் காலமாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த அரசுப் பொருட்காட்சியை மாட்டுத்தாவணிக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது என வினவியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதன் விவரம் வருமாறு;

விளக்கம் வேண்டும்
''தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து வைகை ஆறு வரை உள்ள மண்டகப்படிகளில் 50 க்கும் மேற்பட்ட மண்டகப்படிக்கு சாமி வரவில்லை. ஆனால் இந்த மண்டகப்படிகளில் 2 மற்றும் 3 சேவைக்கு இந்து அறநிலையத்துறை ஓரு சேவைக்கு ரூ.2600 கட்டணமாக வசூல் செய்துள்ளது. ஆனாலும் முறையாக மண்டகப்படிக்கு சாமி வரவில்லை. எனவே இந்த பணத்தை மண்டகப்படிகளுக்கு தமிழக அரசு திருப்பி செலுத்த வேண்டும். தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து வைகை ஆறு வரை உள்ள மண்டகப்படிக்கு ஏன் சாமி வரவில்லை என்ற விளக்கத்தையும் அரசு வெளியிட வேண்டும்.''

தமுக்கம் மைதானம்
''திருவிழா நடைபெறும் காலங்களில் மதுரை தமுக்கம் மைதானத்தில் "அரசு சித்திரை பொருட்காட்சி" வழக்கமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பொருட்காட்சியை மாட்டுதாவணி-க்கு திமுக அரசு மாற்றியது. தமுக்கம் மைதானம் என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம். திருவிழா நடைபெறும் இடமான தல்லாகுளம் வைகை நதிக்கு அருகிலேயே உள்ளது. இவ்விடத்தில் பொருட்காட்சி நடத்தினால்தான் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் பொருட்காட்சியை எளிதாக கண்டுகளிக்க முடியும்.

சம்பந்தமில்லாத இடம்
''இதை தவிர்த்து திருவிழா நடைபெறும் இடத்திற்கு சம்பந்தமில்லாத இடமான மாட்டுதாவணியில் பொருட்காட்சி நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பொருட்காட்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்தால் மக்கள் கூட்டம் ஓரளவு பொருட்காட்சிக்கு சென்றிருப்பார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஓரளவு குறைந்து இருக்கும். இதுபோல் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தவிர்த்து இருக்கலாம்.''

நடவடிக்கை தேவை
''இந்து அறநிலையத்துறையும், தமிழ்நாடு காவல்துறையும் மற்றும் மதுரை மாநகராட்சியின் குளறுபடியே கூட்ட நெரிசலுக்கும், 2 இறப்புக்கும் காரணம். எனவே முறையாக பாதுகாப்பு அளிக்காத காவல்துறையினர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

நிரந்தர மண்டகப்படி
''வைகை ஆற்றில் உள்ள "இந்து அறநிலையத்துறை அமைச்சர்" என்ற மண்டகப்படியை "இந்து அறநிலையத்துறை" மண்டகப்படி அல்லது "இந்து அறநிலையத்துறை அமைச்சகம்" மண்டகப்படி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்து அறநிலையத்துறை மண்டகப்படிக்கு நிரந்தரமாக கட்டிடம் வழங்க வேண்டும்.'' இவ்வாறு, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
-
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான்












Click it and Unblock the Notifications