மதுரை அரசு பஸ்ஸில் சக்ஸஸ்.. ஒரே நாளில் ரூ.449 நல்ல கலெக்ஷன்.. 10 ஆண்டுகளுக்கு பின் மதுரைக்கு ஹேப்பி
மதுரை: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை, போக்குவரத்து கழகம் இயக்கியிருந்தது.. அந்தவகையில், மதுரை மாவட்டத்துக்கும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இரட்டிப்பு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
வார விடுமுறை மற்றும், பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும்.. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிடுவதால், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக போக்குவரத்து கழகம் இத்தகைய சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சிறப்பு பஸ்கள்: அந்தவகையில், 3 நாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக, 19,484 பஸ்கள் இயக்கப்பட்டன.. இதில், மதுரை மாவட்டத்துக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மதுரை அரசுப் போக்குவரத்து கழகம் அப்போதே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தைபொங்கல் பண்டிகைக்கு முன்பு 10.01.2025 முதல் 13.01.2025 வரை 455 பேருந்துகளும் மற்றும் பண்டிகைக்கு பின்பு 14.01.2025 முதல் 19.01.2025 வரை 725 பேருந்துகளும் மதுரை, திண்டுக்கல் தேனி, பழனி விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
மதுரை கோட்டம்: பொங்கலையொட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.. இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 20ம் தேதி ஒரே நாளில் மதுரை கோட்ட அரசு பஸ்கள் ரூ.4.49 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிங்காரவேலு கூறும்போது, "பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பஸ்களை இயக்கினாலும், சென்னைக்கு அதிகளவில் பஸ்கள் சென்றன. மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் இருந்து ஜன.10 முதல் 13 வரை தென் மாவட்டங்களுக்கு 467 பஸ்கள், பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 15 முதல் 20 வரை தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 605 பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு பஸ்கள்: இதில் சென்னையில் இருந்து 4 நாட்களில் மதுரை அரசு பஸ்களில் மட்டும் 15 ஆயிரத்து 636 பயணிகளும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 6 நாட்களில் 24 ஆயிரத்து 724 பயணிகளும் பயணித்துள்ளனர். இதுதவிர பொங்கல் விடுமுறை முடிந்தபின் பயணிகள் வேலைக்கு செல்வதற்காக பல்வேறு நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.
இதில் ஜனவரி 20ம் தேதி அதிகளவில் பயணித்துள்ளனர். இதன்மூலம் மதுரை கோட்டத்தில் உள்ள அரசு சிறப்பு பஸ்கள், ரெகுலர் பஸ்கள், டவுன்பஸ்கள் அனைத்து பஸ்கள் மூலமும் ஒரே நாளில் ரூ.4 கோடியே 49 லட்சத்து 24 ஆயிரம் வசூல் கிடைத்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அதிக வசூலாகும்" என்று தெரிவித்துள்ளார்.
பெருமை: ஜனவரி 20ம் தேதி மட்டும் ஒரே நாளில் மதுரை கோட்ட அரசு பஸ்கள் ரூ.4.49 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதும், இது 10 ஆண்டுகளில் அதிக வசூல் என்றும் கூறியிருப்பது, மதுரை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications