மது பிரியர்களுக்காக இவ்வளவும்.. மத்திய அரசு வழக்கறிஞர்கள் டாஸ்மாக் போகனும்! ஐகோர்ட் பரபர ஆர்டர் -ஏன்?
மதுரை: டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 4,238 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி மது பிரியர்கள் புகார்களை தெரிவித்து வந்தார்கள். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய மது பிரியர் போலீசால் தாக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தினமும் ரூ.10 கோடி ஊழல் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பான பிரச்சனைகளை களைய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் விலைப்பட்டியல் பலகையை அரசு வைத்தது வரவேற்பை பெற்றது. முதல் கட்டமாக 200 கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த டிஜிட்டல் பலகையில் மதுபானங்களில் விலை குறித்த பட்டியல் இடம்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை நடப்பது கட்டுப்படுத்தப்படும் என்பது அரசின் நம்பிக்கை.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் தெரியும்படி விலைப் பட்டியல் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என மத்திய மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனைவருக்கும் தெரியும் வகையில் விலைப் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். மத்திய அரசின் வழக்கறிஞர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று இந்த ஆய்வை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அனைவருக்கும் தெரியும் வகையில் விலைப் பட்டியல் வைக்காவிட்டால் போலீஸ் துணையுடன் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதற்காக அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications