ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு.. தமிழக அரசுக்கு நீதிபதி எச்சரிக்கை
மதுரை: மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய மதுரை மாவட்ட நீதிமன்றம், மீண்டும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.. அப்படி இல்லாவிட்டால் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும் என தமிழ்நாடு அரசுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் எச்சரித்துள்ளது
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பி இருந்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

ஆனால் சகாயம் ஐஏஎஸ் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு விளக்கக் கடிதம் எழுதியிருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தில், "தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை காவல் துறை திரும்பப் பெற்றுக் கொண்டது. தற்போதைய சூழலில் கனிமவள எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.. எனவே, எனக்கு காவல் துறையின் பாதுகாப்பு வழங்கினால், நேரில் வந்து ஆஜராகத் தயார்" இவ்வாறு கூறியிருந்தார்.
மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார்.. இந்து மக்கள் கட்சி எடுத்த அதிரடி முடிவு
இதனிடையே சகாயத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014 முதல் 2023 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதில் சகாயம் ஐஏஎஸ்சும் ஒருவர். இருப்பினும் நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இல்லாமல் சாட்சியம் அளிப்பதற்கு வசதியாக சகாயத்துக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும்" என காவல் துறை அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கல்குவாரி தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிபதி லோகேஸ்வரன், "முன்னாள் ஆட்சியர் சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டவில்லை? ஏன் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது? அவருக்கு மீண்டும் உரிய போலீஸ் பாதுகாப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்படுமா? அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவருக்கு மத்திய பாதுகாப்பு படை சார்பில் அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்" என்று கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications