மதுரை மயிலம்மாளுக்கு 45 வயசில் கள்ளக்காதல்.. குழம்பிய குடும்பம்.. வேப்பமரத்தை கண்டு ஆடிப்போன கிராமம்
மதுரை: குடும்ப பிரச்சனைகள் அல்லது திருமணம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக தற்கொலைகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்கொலை அதிகரிப்புக்கு குடும்ப வன்முறைகளே காரணம் என மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.. சமீபத்தில் நடந்த புள்ளிவிவரத்திலும் குடும்ப வன்முறையை எதிர்கொண்டதாகவும், கடின வேலைகள், புகுந்த வீட்டு செயல்பாடுகள் திருமண வாழ்வை கொடூரமானதாக மாற்றுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர்.. இதற்கு நடுவில் கள்ளக்காதல் அட்டகாசங்களும், அதையொட்டிய மரணங்களும் பெருகி கொண்டிருக்கின்றன. மதுரையில் நடந்ததை பாருங்கள்.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ளது சீகுபட்டி என்ற கிராமம்.. இங்குள்ள சகாயம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.. கட்டிட தொழிலாளியான இவருககு 35 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது.

பிரிந்த தம்பதிகள்
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிக்குள் தகராறு வெடித்தபடியே இருந்தது. ஒருகட்டத்தில், மணிகண்டனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.. தற்போது அந்தபெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதனால் தன்னுடைய பெற்றோருடன் மணிகண்டன் வசித்து வந்தார்.. இதனிடையே மயிலம்மாள் என்ற பெண்ணுடன் மணிகண்டனுக்கு நட்பு ஏற்பட்டது.. அதே பகுதியை சேர்ந்தவர்தான் மயிலம்மாள்.. தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
வயது மூத்த பெண்
மணிகண்டனைவிட 10 வயது மூத்தவர் மயிலம்மாள்.. இவரும் திருமணமானவர்தான்.. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.. நாளடைவில் மணிகண்டனுக்கும், மயிலம்மாளுக்கும் நெருக்கம் அதிகமானது.. பிறகு 2 பேருமே தனிக்குடித்தனம் நடத்த துவங்கினார்கள்.
மயிலம்மாளின் கணவருக்கும், உறவினர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்து, மயிலம்மாளை கண்டித்தனர்.. அதேபோல, வயது மூத்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு மணிகண்டனின் சொந்தக்காரர்களும் வற்புறுத்தினார்கள்.. இரு குடும்பத்திலும் சலசலப்புகளும், கண்டிப்புகளும் அதிகமானதால், கள்ளக்காதல் ஜோடி, தாங்கள் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறினார்கள். இதனால் 2 குடும்பத்தினரும் அவர்களை தேட ஆரம்பித்தார்கள்..
வேப்பமரத்தில்...
அப்போதுதான், வீட்டுக்கு பக்கத்திலிருந்த வேப்பமரத்தில் கள்ளக்காதல் ஜோடி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications