அட பாவமே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் "பார்வதி"க்கு என்னாச்சு! இப்படி சாய்ந்துகிடக்குதே!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை பார்வதிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கடந்த 2000ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் இருந்து குட்டி யானை ஒன்று வாங்கப்பட்டது. அதற்கு பார்வதி என பெயர் சூட்டப்பட்டு அந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானைக்கு 27 வயதாகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பார்வதிக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டது. அதற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அன்று முதலே பார்வதியை கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு யானையின் இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. பரிசோதனையில் இரு கண்களிலும் கண்புரை, வெண் படலம் ஏற்பட்டு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது தெரிந்தது. சென்னை, மதுரை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லாததால் தாய்லாந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பார்வதி தினந்தோறும் காலையிலும் மாலையிலும் கோயிலின் ஆடி வீதிகளில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அவ்வப்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவதும், சிகிச்சை அளிப்பதும் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கோயிலின் ஆவணி மூலத் திருவிழாவில் மீனாட்சி வீதியுலா வந்த போது பார்வதி யானை சென்று வந்தது.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து பார்வதியின் உடலில் நீர்ச்சத்து குறைந்து சோர்வடைந்தது. 3 நாட்களாக வயிற்றுப்போக்கு நீடிப்பதால் தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. தற்போது பார்வதி ஓய்வு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டும் இதே போல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பார்வதி யானை நடக்க முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலில் பார்வதி யானை புத்துணர்வு பெறும் வகையில் ரூ 23.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த தொட்டியில் யானை பார்வதி மகிழ்ச்சியுடன் இறங்கி குதூகலமாக குளித்ததை மறக்க முடியுமா? பார்வதி யானை விரைவில் நலம் பெற வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை வைக்கிறார்கள். மேலும் பார்வதியை, கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications