ஜோசியம் படுத்தும்பாடு.. ஒன்றல்ல, இரண்டல்ல 450 பசுக்களை வாங்கியதால் கடன்.. அப்ஸ்காண்டாகிய மெஸ் ஓனர்!
மதுரை: மதுரையில் ஜோசியர் ஒருவரின் பேச்சை கேட்டு 450 பசுமாடுகளை வாங்கிய மெஸ் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.
மதுரையில் பிரபல ஹோட்டல்களில் ஒன்று ரமணாஸ் மெஸ். இந்த மெஸ்ஸிற்கு 3 கிளைகள் உண்டு. இதன் உரிமையாளர் செந்தில். இவருக்கு ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை இருந்ததாம்.

தனது தொழிலை மேலும் மேம்படுத்த மாடுகளை அதிக அளவில் வளர்த்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என ஜோதிடர், செந்திலிடம் கூறியுள்ளார். இதை நம்பிய செந்தில் 450 மாடுகளை வாங்கி ஒரு பண்ணையே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மாட்டை பராமரிக்கவும் தீவனத்துக்காகவும் பெரும் கடனை பெற்றதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க கோபால் என்ற நபரிடம் 5 கோடியை செந்தில் கடனாக பெற்றுக் கொண்டார். மேலும் அந்த நபரை மெஸ்ஸில் பங்குதாரராகவும் சேர்த்து கொண்டாராம்.
இந்த நிலையில் கடனை அடைக்காத செந்தில், கோபாலிடம் வாங்கிய 5 கோடி பணத்தையும் சுருட்டி கொண்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டதாக கோபால் புகார் அளித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தன்னிடம் பணியாற்றி வந்த 120 ஊழியர்களின் தலா ரூ 2 லட்சம் வங்கியில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனையும் திருப்பிச் செலுத்தாமல் செந்தில் தலைமறைவாகிவிட்டதாக அந்த ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாயமாகியுள்ள செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications