3 மாதம் தான்.. ரம்யாவை அடித்தே கொன்ற சதீஷ்.. தேனி கர்ப்பிணி கொலையில் பகீர்.. மாமனார்-மாமியாரும் கைது
மதுரை: தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்த ரம்யா என்ற பெண், மதுரையைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் மனைவியை சதீஷ் கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போது, சதீஷ், தனது மனைவி ரம்யாவை கொலை செய்ய, அவரது தாய், தந்தையும் முக்கிய காரணம் என்பதால் அவர்களையும் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 31) டிரைவராக பணியாற்றி வருகிறார். தேனி மாவட்டம் கடமலை குண்டுவை சேர்ந்தவர் ரம்யா (25) செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர்.
சதீஷ்குமாரும், ரம்யாவும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் சதீஷ்குமார், ரம்யா ஆகிய இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வதுதெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ரம்யா 3 மாத கர்ப்பமானார்

இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார், ரம்யாவிடம் தகராறு செய்து கட்டிட வேலைக்கு பயன்படுத்தகூடிய கட்டையால் அடித்து தாக்கி உள்ளார். அதில் படுகாயம் அடைந்த ரம்யா, துடி, துடிக்க, ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சதீஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் தங்களது வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக பிரிந்து செல்லுமாறு ரம்யாவை டார்ச்சர் செய்திருக்கிறார்களாம். மேலும் சதீஷ்குமாரின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யாவிற்கு நெருக்கடி கொடுத்தார்களாம். இந்த நிலையில்தான் கட்டையால் தாக்கப்பட்டு ரம்யா கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இந்நிலையில் ரம்யாவின் மாமனார், மாமியார் மீதுகைது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு வரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர். இதையடுத்து சதீஷ்குமார் (31), சதீஷ்குமாரின் தந்தை செல்வம் (55), தாயார் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications