Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜித்குமார் மரணத்தால் அழுது அழுது என் கண்ணீரே வற்றி போயிடுச்சிங்க: நிகிதா பேட்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக வேலை செய்து வந்த அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தபின் நடந்தது என்ன? என்பது குறித்து பேராசிரியை நிகிதா 6.5 மணி நேர சி.பி.ஐ. விசாரணைக்கு பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை என்ற நிலையில் இருக்கிறோம். என்ன நடந்தது என்பது தெரியாமல், ஒருவரையே குற்றம்சாட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். பொய்யான தகவல்களை வேகமாக பரப்புகிறார்கள் என்று தெரிவித்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக 29 வயதாகும் அஜித்குமார் என்பவர் வேலை செய்து வந்தார். மடப்புரம் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் அதிக அளவில் செல்வார்கள். அந்த வகையில் திண்டுக்கல் பேராசிரியை நிகிதா, மடப்புரம் கோவிலுக்கு சென்றுள்ளார். காரை பார்க்கிங் செய்ய அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Madurai Nikita explains what happened after filing a complaint against Ajithkumar for jewellery theft

அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சிறிதுநேரம் கழித்து தனது நகை மாயமானதாக போலீசுக்கு தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

சிபிஐ விசாரணை

இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்தது. பின்னர் அந்த வழக்கை தமிழக அரசே சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள், மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியது சிபிஐ. இதையடுத்து கடந்த ஜூலை 23-ந்தேதி மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் 3½ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

நிகிதா ஆஜர்

இந்த நிலையில், 2-வது கட்டமாக அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தார்கள். இதற்கும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகியோர், மதியம் 1 மணி அளவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வந்தார்கள்.

விசாரணை வளையம்

அவர்களிடம், சி.பி.ஐ. டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்த விசாரணை சுமார், 6½ மணி நேரத்திற்கு மேல் நடந்தது. நிகிதாவின் நகைகள் மாயமானது உண்மைதானா, அவர் பொய் புகார் அளித்தரா? என்பது தொடர்பாக தீவிரமாக விசாரித்தனர். மேலும், யாருடன் எல்லாம் செல்போனில் பேசினார் என்ற விவரங்களையும் கேட்டறிந்தனர். அவருடன் பேசிய நபர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.

கண்ணீரே இல்லை

இதனிடையே சி.பி.ஐ. விசாரணையை முடித்து வெளியே வந்த பேராசிரியை நிகிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மதுரை திருப்புவனம் மடப்புரம் கோவில் பகுதியில் சம்பவம் நடந்த நேரத்தில் நடந்ததை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூறியிருந்தேன். என்னை பற்றி தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் நாங்கள் அழுவதற்கு கண்ணீரே இல்லை என்ற நிலையில் இருக்கிறோம். என்ன நடந்தது என்பது தெரியாமலேயே, ஒருவரையே குற்றம்சாட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்புகிறார்கள்.

காய்கறி வாங்க போக முடியவில்லை

ஒருவர் இறந்தது வேதனையான விஷயம். வேண்டும் என்று யாராவது அப்படி செய்வார்களா? நாங்களும் வேதனையில்தான் இருக்கிறோம். காய்கறி, மளிகை பொருள் கூட வாங்குவதற்கு என்னால் வெளியே போக முடியவில்லை. சாப்பிட, பெட்ரோல் போடுவதற்கு கூட போக முடியவில்லை. கல்லூரியிலும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். கூடவே இருப்பவர்களும் இப்போது தொல்லை செய்கிறார்கள். நான் தவறு செய்தேனா? என்பதை ஆய்வு செய்யாமல், என்னிடம் மிக கடுமையாக நடந்து கொள்கிறார்கள். என்னவென்றே தெரியாமல் ஏதேதோ என்னை பற்றி பேசுகிறார்கள்.


காத்துக் கொண்டிருக்கிறார்கள்

இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதை பற்றி நான் எதுவும் கூறவில்லை. அது அவர்களின் கடமை. நானும் உயிரை மாய்த்துக் கொண்டால், அதனையும் சமூக வலைதளங்களில் போட்டு விளம்பரமாக்கலாம் என பலரும் நினைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நகை திருட்டு போனதாக புகார் அளித்தோம். நாங்கள் அதுமட்டும் தான் செய்தோம். போலீசார் எடுத்த நடவடிக்கைகள் எதுவுமே எங்களுக்கு தெரியாது. நாங்கள் வீட்டிற்கு சென்று விட்டோம். அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நாங்கள் பேசவில்லை. மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். எங்கள் தரப்பு நியாயத்தை கூறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+