கேரளாவை கலக்கும் நம்ம ஊரு பொண்ணு.. கோட்டயம் கலெக்டர் விக்னேஷ்வரி.. எர்ணாகுளத்தில் யாரு தெரியுமா?
மதுரை : கேரள மாநிலத்தில் கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார் நம் மதுரையைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி விக்னேஷ்வரி. கேரளா அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ள விக்னேஷ்வரி தற்போது கோட்டயம் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கேரளா சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழக இயக்குநராக இருந்த விக்னேஷ்வரி கோட்டயம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். விக்னேஷ்வரி கோட்டயம் மாவட்டத்தின் 48வது கலெக்டர் ஆவார்.

விக்னேஷ்வரி ஐஏஎஸ், கேரளாவில் கல்லூரி கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு பொறுப்புகளிலும் சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெற்ற விக்னேஷ்வரி தற்போது கோட்டயம் கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கேரளாவில் பணியாற்றும் விக்னேஷ்வரிக்கும் தமிழ்நாட்டின் மதுரைக்கும் பெரிய தொடர்பு உண்டு. கேரளா 2015 கேடர் ஐஏஎஸ் அதிகாரியான விக்னேஷ்வரி மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர். இவரது தந்தை வெள்ளைச்சாமி, தாய் சாந்தி இருவரும் மதுரையில் வசிக்கின்றனர்.

விக்னேஷ்வரியின் கணவர் உமேஷும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தான். மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த உமேஷும் கேரளாவில் கலெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். அதுவும் தற்போது விக்னேஷ்வரி கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கோட்டயத்தின் பக்கத்து மாவட்டமான எர்ணாகுளத்தில் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார் உமேஷ்.

கோட்டயம் மாவட்ட ஆட்சியராக அண்மையில் பதவியேற்ற விக்னேஷ்வரி, முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என உறுதி எடுத்துள்ளார். முன்னுரிமைக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைக் கண்டறிய மக்களின் கருத்துகளை கேட்டுச் செயல்படுவேன். இதற்காக சமூக ஊடகப் பிரச்சாரம் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் விக்னேஷ்வரி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications