அசைவே இல்லை.. சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த நபர்.. ஓபிஎஸ் வந்த ஃபிளைட்டில் பரபரப்பு..!
ஓபிஎஸ் வந்த விமானத்தில் பயணி ஒருவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார்
மதுரை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வந்த விமானத்தில், ஒரு பயணியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையிலிருந்து, சென்னை வந்து மும்பை செல்வேண்டிய ஏர்இந்தியா விமானம் இன்று மதியம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓபிஎஸ் பயணித்து கொண்டிருந்தார்.. அவருடன் சேர்த்து 93 பயணிகளும் இருந்துள்ளனர்.

சென்னை
மதியம் 2.15 மணிக்கு, சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்து தரையிறங்கியது அந்த விமானம்.. சென்னையில் இறங்க வேண்டிய பயணிகளும் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர்.. ஆனால், ஒரே ஒருத்தர் மட்டும் இறங்கவில்லை.. சீட்டிலேயே உட்கார்ந்திருந்தார்.. அதனால், ஏர்இந்தியா ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி பார்த்தனர்.. அந்த நபரிடம் சென்றனர்... அவர் சீட்டிலேயே சாய்ந்து கண்ணை மூடி இருந்தார்.

பரபரப்பு
எனவே அவர் தூங்குகிறார் என்று நினைத்து கொண்டு, ஊழியர்கள் எழுப்ப முயன்றனர்.. ஆனாலும் அவர் எழவில்லை.. பிறகு சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடக்கிறார் என்று நினைத்து, ஏர்போர்ட்டில் இருந்த மருத்துவ குழுவுக்கு தகவல் அளிக்கவும், அவர்களும் விரைந்து சென்று அந்த பயணியை பரிசோதித்தனர்.. அப்போதுதான் தெரியவந்தது, அவருக்கு ஏற்கனவே உயிர் பிரிந்திருந்தது.

மர்ம மரணம்
அவர் பெயர் சண்முக சுந்தரம்.. 72 வயதாகிறது.. மதுரையை சேர்ந்தவர்.. பிறகு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து சடலத்தை ஃபிளைட்டில் இருந்து இறக்கி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதன்காரணமாக, மும்பை செல்ல வேண்டிய பிளைட், அங்கிருந்து கிளம்பே இல்லை..

மும்பை
சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் இறங்கிவிட்ட நிலையில், 115 பயணிகள் மும்பைக்கு செல்ல தயாராக பிளைட்டில் ரெடியாக உட்கார்ந்திருந்தனர்.. ஆனால், பயணி ஒருவர் இறந்துவிட்டதால், ஃபிளைட்டை இயக்க அந்த பைலட் மறுப்பு தெரிவித்தார்.. பிறகு, அனைத்து பயணிகளையும் கீழே இறக்கிவிட்டு, அந்த விமானம் முழுக்க கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.. அதற்கு பிறகே பிளைட் மும்பை கிளம்பி சென்றது..!
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications